தமிழக அரசின் இலக்கிய விருதுகள்

தமிழக அரசின் இலக்கிய விருதுகள் என்பது தமிழக அரசின் சார்பில் இலக்கிய வளர்ச்சி, தமிழ் மொழி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டு செய்தவர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கப்படும் விருதுகளாகும்.

விருதுகளின் பட்டியல்

இவ்விருதானது ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உடையது. [1]

  1. திருவள்ளுவர் விருது
  2. தந்தை பெரியார் விருது
  3. அண்ணல் அம்பேத்கர் விருது
  4. பேரறிஞர் அண்ணா விருது
  5. பெருந்தலைவர் காமராசர் விருது
  6. மகாகவி பாரதியார் விருது
  7. பாவேந்தர் பாரதிதாசன் விருது
  8. தமிழ்த்தென்றல் திரு. வி. க விருது
  9. முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ.விசுவநாதம் விருது

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

தமிழக அரசு சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றிய அறிஞர்களே தேர்வு செய்து விருது வழங்குகிறது.[2]

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும் கொண்டது.

  1. தமிழ்த்தாய் விருது
  2. கபிலர் விருது
  3. உ.வே.சா விருது
  4. கம்பர் விருது
  5. சொல்லின் செல்வர் விருது
  6. ஜி.யு.போப் விருது
  7. உமறுப்புலவர் விருது
  8. இளங்கோவடிகள் விருது
  9. அம்மா இலக்கிய விருது

தமிழ்த்தாய் விருது ஆண்டுதோறும் ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது. அதனால் அந்த அமைப்பிற்கு ரூபாய் ஐந்து லட்சமும் கேடயமும் தரப்படுகிறது.

உலக தமிழ்ச் சங்க விருதுகள்

  • இலக்கிய விருது
  • இலக்கண விருது
  • மொழியியல் விருது

தமிழ்ச்செம்மல் விருது

தமிழ்ச்செம்மல் விருது என்பது தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விருதாகும். இந்த விருதிற்கு மாவட்டத்திற்கு ஒரு அறிஞர் தேர்வு செய்யப்படுகிறார்.இவ்விருது இருபத்து ஐந்தாயிரம் ரூபாயும், பாராட்டுரையும் கொண்டதாகும்.[3]

மேற்கோள்கள்