தட்சயக்ஞம் (திரைப்படம்)

தட்சயக்ஞம் (Dakshayagnam) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. நடராஜ பிள்ளை, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

தக்ஷயக்ஞம்
இயக்கம்ராஜா சந்திரசேகர்
தயாரிப்புமெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்
கதைராஜா சந்திரசேகர்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
எம். ஜி. நடராஜ பிள்ளை
சி. ஜி. வெங்கடேசன்
எம். ஜி. ராமச்சந்திரன்
என். எஸ். கிருஷ்ணன்
எம். எம். ராதா பாய்
கே. ஆர். ஜெயலட்சுமி
டி. என். சந்திராம்மாள்
டி. ஏ. மதுரம்
வெளியீடுமார்ச்சு 31, 1938
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இப்பாடல் பட்டியல் லக்ஸ்மன் ஸ்ருதி வெளியீட்டிலிருந்து எடுக்கப்பட்டது.[2]

  1. ஸ்ரீகணேச பாஹிமாம் சந்ததம்
  2. தனியாய் எனை விடுத்தாய் சதியே நீ
  3. வருவாயே தின்பம் தருவாயே
  4. ஸ்ரீமந்நாராயண கோவிந்தா
  5. மழையில்லா சீமையில் மாடுகள் பூட்டி
  6. ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு
  7. பரமானந்த சுபதினம்
  8. மனமோகனாங்க சுகுமாரா
  9. மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே
  10. ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே
  11. சிவானந்த ரசம் இதுவே
  12. பெறும் புவிதனிலே மாந்தர் பெருநெறி
  13. ஹா மாதர் மனோகர வாழ்க்கை
  14. அஞ்சி உன் கட்டளைக்கே
  15. அதிரூப லாவண்ய சுந்தரா
  16. மாதருக்கெல்லாம் குணம்
  17. பவாநீ பவாநீ பவாநீ
  18. வாருங்கள் எல்லோரும் தட்சன்
  19. இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
  20. பார்வதியாக ஜனிப்பாய்

கதைச்சுருக்கம்

பிரம்மா வம்சத்தைச் சேர்ந்த அரசன் தக்ஷ்காவின் மகள் சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக சிவபெருமானை (வி. ஏ. செல்லப்பா) திருமணம் செய்கிறாள். அதில் வருத்தமடைந்த அரசன், சிவபெருமானை அவமதிக்கும் விதமாக யாகம் ஒன்றை நடத்துகிறார். சிவபெருமானின் விருப்பத்திற்கு மாறாக, அந்த யாகத்தில் கலந்து கொள்ளும் சதியை, அவளது தந்தை அவமதிக்கிறார். அதனை தாங்கிக்கொள்ள இயலாத சதி, தீயில் தன் உயிரை மாயித்துக்கொள்கிறாள்.

வீரபத்திரன் வாயிலாக யாகத்தை தடுத்து, தக்ஷயாவின் தலையை கொய்து, ஆட்டின் தலையுடன் படைக்கிறார் சிவபெருமான். பின்னர், சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆட, மற்ற கடவுள்கள் தலையிடுகின்றனர். அப்போது, விஷ்ணு சக்கரம் சதியின் சடலத்தை துண்டாக்க, அது இந்திய துணைக்கண்டத்தில் பல இடங்களில் விழுந்துவிடுகின்றன.

வெளியீடு

31 மார்ச் 1938 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக தோவியை தழுவியது.[3][4]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தட்சயக்ஞம்_(திரைப்படம்)&oldid=33802" இருந்து மீள்விக்கப்பட்டது