டோம்பிவ்லி ஃபாஸ்ட்
டோம்பிவ்லி ஃபாஸ்ட் (Dombivali Fast, வார்ப்புரு:Lang-mr ) என்பது 2005 ஆண்டு வெளியான ஒரு மராத்தித் திரைப்படம் ஆகும். இதை நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் குல்கர்னி, ஷில்பா துலாஸ்கர் மற்றும் சந்தேஷ் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
டோம்பிவ்லி ஃபாஸ்ட் | |
---|---|
இயக்கம் | நிஷிகாந்த் காமத் |
தயாரிப்பு | மீர் கெய்க்வாட் |
கதை | நிஷிகாந்த் காமத் (திரைக்கதை) சஞ்சை பவார் (திரைக்கதை மற்றும் உரையாடல்) |
இசை | சஞ்சை மௌரியா ஆல்வின் ரிகோ சமீர் பட்டபீக்கர் (பின்னணி) |
நடிப்பு | சந்தீப் குல்கர்னி சில்பா துல்ஸ்கர் சந்தீஷ் ஜடவ் |
ஒளிப்பதிவு | சஞ்சை ஜாதவ் |
படத்தொகுப்பு | அமித் பவார் |
வெளியீடு | 2005 |
ஓட்டம் | 112 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
இந்தப் படம் மைக்கேல் டக்ளஸ் நடித்த 1993 ஹாலிவுட் படமான ஃபாலிங் டவுனுடன் ஒத்திருக்கிறது.
இப்படத்தை தமிழில் காமத் எவனோ ஒருவன் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். அப்படத்தில் ஆர். மாதவன் முன்னணி பாத்திரத்தை ஏற்று நடித்தார். [1]
கதை
தன்னளவில் நேர்மையாக இருக்கும் நடுத்தர வர்க்க சாதாரண வங்கி ஊழியர் மாதவ் ஆப்தே. அவர் நாள்தோறும் டோம்பிவ்லி ஃபாஸ்ட் என்னும் தொடருந்தில் வேலைக்குப் போகிறார். அவர் தனது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பரவியுள்ள அநீதி, ஊழலால் விரக்தி அடைகிறார். மன உளைச்சளால் ஒரு கட்டதில் பொங்கி எழுகிறார். அதனால் அவர் எடுக்கும் முடிவு என்ன, அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதே கதையின் முடிவு.
நடிப்பு
- சந்தீப் குல்கர்னி மாதவ் ஆப்தேவாக
- ஷில்பா துலாஸ்கர் மாதவனின் மனைவியாக
- சந்தேஷ் ஜாதவ் காவல் ஆய்வாளர் சுபாஷ் அனஸ்புரேவாக
- ஸ்ருஷ்டி போக்சே, மாதவ் ஆப்தேவின் மகள் பிரச்சி மாதவ் ஆப்தேவாக
- ஹர்ஷதா கான்வில்கர் பெண் பேச்சாளராக
- பாலகிருஷ்ணா ஷிண்டே விருந்தினர் தோற்றத்தில்
விருதுகள்
- 2006 ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் - சிறந்த நடிகர் (மராத்தி) - சந்தீப் குல்கர்னி
- 2006 முதல் படங்களின் ஆசிய விழா - சிறந்த இயக்குனர் (ஸ்வரோவ்ஸ்கி டிராபி) - நிஷிகாந்த் காமத்
- 2006 லாஸ் ஏஞ்சல்ஸின் இந்திய திரைப்பட விழா - சிறந்த படம் (ஜூரி விருது)
- 2006 தேசிய திரைப்பட விருதுகள் - மராத்தியில் சிறந்த திரைப்படம் (வெள்ளி தாமரை விருது)
- 2006 புனே சர்வதேச திரைப்பட விழா - சிறந்த மராத்தி திரைப்படம் ( மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சாந்த் துக்காராம் விருது) [2]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டோம்பிவ்லி ஃபாஸ்ட்
- 'டோம்பிவ்லி ஃபாஸ்ட்' பற்றிய நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்
- சந்தீப் குல்கர்னியுடன் ஒரு நேர்காணல் [ <span title="Dead link since December 2016">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]
- யூடியூபில் Dombivali Fast