டீ கடை ராஜா
டீ கடை ராஜா (Tea Kadai Raja) (தமிழ்: 2016 இல் Indian தமிழகத் திரைப்படத்துறை காதல் திரைப்படம். எழுதி இயக்கியவர்கள் மருது ராஜா / ராஜா சுப்பையா. 2014 இல் வெளிவந்தவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) படத்தில் இடம்பெற்ற டீ கடை ராஜா என்ற பாடலைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.[1] எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் [2] இப்படத்தில் மருது ராஜா / ராஜா சுப்பையா., நேஹா காயத்திரி, யோகி பாபு, ஷர்மிளா தாபா, மதன் பாப் போன்றோர் நடித்திருந்தனர். 2016 ஏப்ரல் 8 அன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டனர்.
டீ கடை ராஜா | |
---|---|
இயக்கம் | மருது ராஜா / ராஜா சுப்பையா |
கதை | மருது ராஜா / ராஜா சுப்பையா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எலன் |
படத்தொகுப்பு | முத்துராஜ் |
கலையகம் | எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் |
விநியோகம் | ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் |
ஓட்டம் | 107 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
தனுஷ் (நடிகர்), சமந்தா ருத் பிரபு மற்றும் ஏமி சாக்சன் ஆகியோர் நடித்திருந்த தங்க மகன் (2015 திரைப்படம்) என்ற திரைப்படத்திற்கு டீ கடை ராஜா என்ற பெயர் பரிசீலிக்கப்ட்டது.[3] பின்னர், 'டீ கடை ராஜா' என்ற பெயரை எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் சார்பில் மருது ராஜா / ராஜா சுப்பையா ஆகிய இருவரும் தங்களது படைப்பிற்கு தேர்ந்தெடுத்தனர்.[4]
கதை
கதை வளர்ந்துவரும் ஒரு நகரத்தில் வாழும் சிறுவர்களை சுற்றியும் மற்றும் அவர்களது நகர்ப்புற பின்னணி பற்றியும், சிறுவர்களுக்கு நிகழும் காதல் விவகாரம் பற்றியும் பேசுகிறது.[4]
நடிகர்கள்
- மருது ராஜா / ராஜா சுப்பையா
- நேஹா காயத்தி,
- யோகி பாபு
- சர்மிளா தாபா
- மதன் பாப்
வெளியீடு
"பீப் போடு" பாடல் முன்னோட்டம் 31 மார்ச் 2016இல் வெளிவந்தது. படம் 8 ஏப்ரல் 2016இல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்] வெளியிட்டது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை யூடியூப் மற்றும் ராஜ் தொலைக்காட்சி பெற்றனர்
ஒலித்தொகுப்பு
ஒன்பது பாடல்கள் அடங்கிய இதன் பாடல் தொகுப்பை தன்ராஜ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒருபாடல் இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு இசையமைக்கப்பட்டது. ஒரு பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
# | பாடல் | பாடியோர் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஏ நண்பா கேளு" | தன்ராஜ் மாணிக்கம் | 3:35 | |
2. | "அசத்துது உன் அழகு" | தன்ராஜ் மாணிக்கம் | 4:06 | |
3. | "மெலிஞ்சு போன" | Rupesh | 4:32 | |
4. | "தாவணியி தாஜ்மகால்" | மதிச்சயம் பாலா, கீர்த்தி ஐய்யர் | ||
5. | "சந்தியிலே" | கானா பாலா | 4:28 | |
6. | "உயிரே உயிரே" | தன்ராஜ் மாணிக்கம் | 2:01 | |
7. | ""பீப்ப போடு (Trailer Theme)" | தன்ராஜ் மாணிக்கம் | 0:56 | |
8. | ""டீ கடை ராஜா" (Title Theme)" | தன்ராஜ் மாணிக்கம் | 0:48 | |
9. | "சக்சஸ் ஆப் லவ்" (வாத்தியங்கள் மட்டும்)" | 1:11 |
விமர்சனம்
வார்ப்புரு:Expand section பட வெளியீட்டுக்கு முன் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி திரைப்படத்தை பார்த்து முதல் பாதியில் திரைக்கதை இறுக்கமாக இருப்பதாகவும் , இரண்டாம் பாதியில் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது பாராட்டினார்.[5]
மேற்கோள்கள்
- ↑ Subramanian, Anupama (1 April 2016). "More of the ‘Beep’ phenomenon". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/entertainment/kollywood/010416/more-of-the-beep-phenomenon.html. பார்த்த நாள்: 1 April 2016.
- ↑ editor (23 January 2016). "டீ கடை ராஜா" (in Tamil). Chennai City News. http://www.chennaicitynews.net/cinema/டீ-கடை-ராஜா-2-16011/. பார்த்த நாள்: 1 April 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ staff (18 December 2015). "Preview". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160412062212/http://indulge.newindianexpress.com/preview-35/chennai/41561. பார்த்த நாள்: 31 March 2016.
- ↑ 4.0 4.1 K R, Manigandan (28 March 2016). "IAS Trainer is Now a Filmmaker". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/tamil/IAS-Trainer-is-Now-a-Filmmaker/2016/03/28/article3349217.ece. பார்த்த நாள்: 30 March 2016.
- ↑ http://www.nettv4u.com/movie-review/tamil/tea-kadai-raja