டி. பி. கஜேந்திரன்
டி. பி. கஜேந்திரன் (T. P. Gajendran, 1955 – 5 பெப்ரவரி 2023) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார்.[2] தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[3] விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். இவர் 15இற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாளின் மகனாவார்.[4] நடிகை டி. பி. முத்துலட்சுமி அவரது மைத்துனி, கஜேந்திரனின் வளர்ச்சிக்கு உதவினார்.[5]
டி. பி. கஜேந்திரன் | |
---|---|
பிறப்பு | 1955 |
இறப்பு | 5 பெப்ரவரி 2023 (அகவை 68) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1985–2023 |
பிள்ளைகள் | தனலட்சுமி[1] |
தொழில் வாழ்க்கை
டி.பி.கஜேந்திரன் கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிதம்பர ரகசியம் (1985) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1988 இல், வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் 2000 இற்கு முற்பகுதியில் குறைந்த செலவில் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படங்களை இயக்கினார். இது போன்ற குடும்பத் திரைப்படங்களில் பிரபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.[6][7] இதில் பட்ஜெட் பத்மநாபன் (2000), மிடில் கிளாஸ் மாதவன் (2001), மற்றும் பந்தா பரமசிவம் (2003) ஆகியவை அடங்கும். இவர் இயக்கிய நான்காவது படமான ஆசை வச்சேன் உன் மேலே திரைப்படத்திற்குப் பிறகு திரைப்படங்களை இயக்கவில்லை.[8] 2001 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்களின் போக்கு காரணமாக இவர் கற்பூர நாயகி என்ற இந்து பக்தித் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ரோஜா மற்றும் பானுப்ரியா நடிக்கவிருந்த இத்திரைப்படம் கைவிடப்பட்டது.[9]
2015 இல், இவர் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
இறப்பு
கஜேந்திரன் 2023 பெப்ரவரி 5 அன்று தனது 68 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.[11]
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1988 | வீடு மனைவி மக்கள் | |
1988 | எங்க ஊரு காவல்காரன் | |
1988 | கன்டே மனே மக்களு | கன்னடத் திரைப்படம்[12] |
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் | |
1989 | எங்க ஊரு மாப்பிள்ளை | |
1989 | தாயா தாரமா | |
1989 | நல்ல காலம் பொறந்தாச்சு | |
1990 | பெண்கள் வீட்டின் கண்கள் | |
1993 | கொஞ்சும் கிளி | |
1995 | பாட்டு வாத்தியார் | |
1997 | பாசமுள்ள பாண்டியரே | |
2000 | பட்ஜெட் பத்மநாபன் | |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் | |
2003 | பந்தா பரமசிவம் | மேட்டுப்பட்டி மச்சான் திரைப்படத்தின் மறுஆக்கம் |
2007 | சீனாதானா 001 | சிஐடி மூசா மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கம் |
2010 | மகனே என் மருமகனே |
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் |
---|---|---|
1985 | புதிய சகாப்தம் | கஜேந்திரன் |
1985 | அவள் சுமங்கலிதான் | பெர்னாண்டசு |
1998 | பிரியமுடன் | |
1998 | குருப்பார்வை | |
2000 | பாரதி | குவளை |
2000 | பட்ஜெட் பத்மநாபன் | வழக்கறிஞர் |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் | சிறப்புத் தோற்றம் |
2002 | பம்மல் கே. சம்பந்தம் | இயக்குநர் |
2002 | இவன் | அமைச்சர் |
2003 | பந்தா பரமசிவம் | |
2003 | பிதாமகன் | மருத்துவர் |
2003 | சொக்கத் தங்கம் | |
2004 | பேரழகன் | கமிசன் மண்டி கஜேந்திரன் |
2004 | மகா நடிகன் | |
2004 | ஜெயசூர்யா | |
2005 | சந்திரமுகி | |
2005 | மஜா | மருத்துவர் |
2007 | சீனாதானா 001 | |
2007 | அடாவடி | |
2009 | வில்லு | திருமண விருந்தாளி |
2009 | தோரணை | அடுக்குமாடிக் குடியிருப்பு செயலர் |
2010 | பாணா காத்தாடி | கருணாசின் தந்தை |
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | |
2010 | மகனே என் மருமகனே | |
2011 | யுவன் யுவதி | தங்கமீனாவின் தந்தை |
2011 | வேலாயுதம் | பயணச்சீட்டு பரிசோதகர் |
2012 | மயங்கினேன் தயங்கினேன் | |
2013 | ஒன்பதுல குரு | துரை சிங்கம் |
2013 | சுட்ட கதை | சுடலை |
2013 | தீக்குளிக்கும் பச்சை மரம் | |
2014 | இராமானுசன் | எம்பெருமாள் செட்டியார் |
2014 | பட்டையக் கிளப்பணும் பாண்டியா | மருத்துவர் |
2015 | துணை முதல்வர் |
தொலைக்காட்சித் தொடர்கள்
- இதயம் - சன் தொலைக்காட்சி - 2009 முதல் 2012 வரை
மேற்கோள்கள்
- ↑ "Events – TP Gajendran's Daughter's Reception Movie Trailer Launch – IndiaGlitz Tamil". https://www.indiaglitz.com/tp-gajendran-s-daughter-s-reception-tamil-event-17808.html.
- ↑ T. P. G ajendran calls for revival of Tamil theatre. The Hindu - Cities: Tiruchirapalli (18 Jul 2012). Retrieved 2013-11-16
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081014082201/http://www.hindu.com/fr/2008/06/06/stories/2008060651150400.htm.
- ↑ "Sparkling presence". The Hindu. 6 சூன் 2008. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Sparkling-presence/article15398893.ece.
- ↑ "T.P.Gajendran Exclusive Interview". 13 சூலை 2019. https://www.youtube.com/watch?v=7L0p8yo1Ob8.
- ↑ "dinakaran" இம் மூலத்தில் இருந்து 2001-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010614230922/http://dinakaran.com/cinema/english/interviews/02-10-00/gajend2.htm.
- ↑ "dinakaran". 10 February 2001 இம் மூலத்தில் இருந்து 10 February 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010210044731/http://www.dinakaran.com/cinema/english/interviews/25-09-00/gajend.htm.
- ↑ "Aasai Vachen Unmele". 20 September 2003 இம் மூலத்தில் இருந்து 20 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030920115113/http://www.chennaionline.com/location/aasai.asp.
- ↑ "15-12-01" இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041130194841/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2001/dec/15-12-01.html.
- ↑ "Gajendran adjudged as CTA head". 5 அக்டோபர் 2015. http://www.deccanchronicle.com/151005/entertainment-kollywood/article/gajendran-adjudged-cta-head.
- ↑ Tamil actor-director TP Gajendran passes away
- ↑ http://kannadamoviesinfo.wordpress.com/2013/04/06/ganda-mane-makkalu-1988/