டி. ஆர். இரமேஷ் (வழக்கறிஞர்)

டி. ஆர். ரமேஷ் (T R Ramesh) இந்திய வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் மீதான இந்துக்களின் பண்பாடு, ஆகமம் மற்றும் பரம்பரிய உரிமைகளை காக்கும், கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.[1][2] இவரும் சுப்பிரமணியன் சுவாமியும் இணைந்து நடத்திய வழக்கில் சிதம்பரம் நடராசர் கோயிலில் பூஜை செய்யும் பரம்பரை உரிமையை பொது தீட்சிதர்களுக்கு நீதிமன்றத்தில் பெற்றுத் தந்தனர்.

மேலும் இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள இலக்குமி நரசிம்மர் கோயில், பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமி கோயில், கொடுங்கையூர் அய்யப்பன் கோயில் போன்ற 5 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை கைப்பற்றுவத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மூலம் தடையானை பெற்றார்.

இந்து சமய அறநிலையத் துறை மீதான வழக்குகள்

இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகள் தமிழகத்தில் 45 கோவில்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்தியக் கூட்டு அறக்கட்டளையின் அமைப்பாளர் டி ஆர் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் பல பெரிய கோவில்களை நிர்வகித்து வருவதாக நான் குற்றம் சாட்டினார். மேலும் அறநிலையத் துறையின் சட்டம் மற்றும் விதிகளை மீறி மோசடி மற்றும் வஞ்சகத்தால் மட்டுமே மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்