ஞானசௌந்தரி (1935 திரைப்படம்)
ஞானசௌந்தரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கி,[1] ஸ்ரீநிவாசா சினிடோன் பதாகையின் கீழ் ஏ. நாராயணன் தயாரித்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாச ராவ், சரோஜினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் ஞானசௌந்தரி என்ற பெண்ணைச் சுற்றி வரும் கதையாகும். சிற்றன்னை அனுப்பிய கூலிப்படையினர் ஞானசௌந்தரியை காட்டுக்கு கடத்திச் சென்று அவளது இரு கைகளையும் வெட்டி எடுத்துவிடுகின்றனர். உயிருக்கு போராடிவரும் அவளை பக்கத்து நாட்டு இளவரசரான பிலேந்திரன் காட்டிரிலுந்து காப்பாற்றப்படுகிறாள்.
ஞானசௌந்தரி | |
---|---|
இயக்கம் | ஏ. நாராயணன் |
தயாரிப்பு | ஸ்ரீநிவாசா சினிடோன் |
நடிப்பு | ஸ்ரீநிவாச ராவ், சரோஜினி. |
வெளியீடு | 1935 |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தப் படம் நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த நாடகம் கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையைத் தழுவி இயற்றப்பட்டது. இப்படம் வெற்றிபெறவில்லை.[3]
நடிகர்கள்
- பிலேந்திரனாக ஸ்ரீநிவாச ராவ்
- ஞானசௌந்தரியாக சரோஜினி
மேற்கோள்கள்
- ↑ தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!
- ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) இம் மூலத்தில் இருந்து 2018-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181020094942/http://www.lakshmansruthi.com/cineprofiles/1935-cinedetails10.asp. பார்த்த நாள்: 2016-10-18.
- ↑ "மே 21 9148: ‘ஞான சௌந்தரி’ 75 ஆண்டுகள் - மூன்று படங்கள்... ஒரு வெற்றி!" (in ta). 2023-05-12. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/989022-three-films-one-win.html.