ஞானக்குறள்

ஞானக்குறள் ஒளவையாரால் எழுதற்பெற்ற குறள் நூலாகும். இந்நூல் முந்நூற்றுப் பத்துக் குறள் வெண்பாக்களால் ஆனது. இந்நூலில் வீடுபேறு பற்றி குறட்பாக்கள் உள்ளன. இந்நூல் ஒளவைக் குறள் என்றும், ஒளவை ஞானக்குறள் என்றும் அறியப்படுகிறது. திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால். காமத்துப் பால் என்று வகைப்படுத்திய திருவள்ளுவர், வீடு பேறு பற்றி கூறாமையால் ஒளவையார் ஞானக்குறளை எழுதினார் என்றொரு கூற்றுண்டு.

ஆதார நூல்

சைவ இலக்கிய வரலாறு ஒளவையார் பகுதி பக்கம் - 423 424

"https://tamilar.wiki/index.php?title=ஞானக்குறள்&oldid=14439" இருந்து மீள்விக்கப்பட்டது