ஜோசப் (2018 திரைப்படம்)

ஜோசப் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி, திகிலூட்டும் குற்றவியல் திரைப்படமாகும். இப்படத்தை எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். ஷாஹி கபீர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் .[1] இதில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், இர்ஷாத், ஆத்மியா ராஜன், ஜானி ஆண்டனி, சுதி கொப்பா, மாளவிகா மேனன், மாதுரி பிரகன்சா ஆகியோர் நடித்துள்ளனர்.[2] விசாரணை குறித்த திகிலூட்டும் கதை இப்படத்திற்கு வலுவூட்டுகிறது. ஓய்வு பெற்ற நான்கு போலீஸ்காரர்களின் வாழ்க்கையில் நிகழும் கதையே படத்தின் மையக்கரு. திரைப்படத்தின் சில காட்சிகள் (தொடக்கத்தில் காட்டப்படும் இரட்டைக் குற்றக் காட்சி) எழுத்தாளர் ஷாஹி கபீரின் நிஜ வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.[3][4] ஜோஜு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். தேசிய விருதுகளில் சிறப்புப் பாராட்டையும் இவர் பெற்றார். இப்படம் தமிழில் ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் என்ற பெயரிலும், பின்னர் தெலுங்கில் ராஜசேகர் நடித்த சேகர் என்ற பெயரிலும், கன்னடத்தில் வி.ரவிச்சந்திரன் நடிப்பில் ரவி போபண்ணா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது . சன்னி தியோலை வைத்து இந்தி மறு ஆக்கம்கும் தயாராகிறது. பென்யாமினின் 'சரீரசாஸ்திரம்' நாவலுடன் இப்படத்தின் மையக் கருப் பல ஒற்றுமைகள் உள்ளன.

ஜோசப்
இயக்கம்எம்.பத்மகுமார்
தயாரிப்புஜோஜு ஜார்ஜ்
கதைஷாகி கபீர்
இசைSongs:
ரஞ்சின் ராஜ்
பாக்கியராஜ் (Pandu Paadavarambathiloode)
Score:
அணில் ஜான்சன்
நடிப்புஜோஜு ஜார்ஜ்
திலீஷ் போத்தன்
அதியா ராஜன்
மாளவிகா மேனன்
மாதுரி பிரகன்சா
ஒளிப்பதிவுமகேசு மாதவன்
படத்தொகுப்புகிரன் தாஸ்
கலையகம்அப்பு பத்து பப்பு தயாரிப்பு
விநியோகம்சௌபீஸ் ஸ்டுடியோ
வெளியீடுநவம்பர் 16, 2018 (2018-11-16)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவுரூ 3.5 கோடி
மொத்த வருவாய்ரூ 28 - 37 கோடி

கதைச்சுருக்கம்

பீட்டர் (திலீஷ் போத்தன்) காவல்துறையிடம் இருந்து பதக்கம் பெறுவதுடன் படம் தொடங்குகிறது. விழா முடிந்ததும், பீட்டர் மற்றும் ஜோசப்பின் (ஜோஜு ஜார்ஜ்) நண்பர்கள் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, பதக்கத்தைப் பெற்றதற்கான காரணத்தை ஓட்டுநர் விசாரித்தார்.

கதை பின்னர், ஓர் ஓய்வுபெற்ற போலீஸ்காரரான ஜோசப்பை நோக்கி நகர்கிறது, அவர் தனித்துவமாகவும் கூர்மையாகவும் விசாரணை மேற்கொள்வதில் வல்லவர். ஜோசப், தன் மனைவி ஸ்டெல்லாவிடமிருந்து (ஆத்மியா ராஜன்) பிரிந்து வாழ்கிறார்.

அவர் ஒரு வயதான தம்பதியினரின் கொலை குறித்த குற்றத்தை விசாரிக்கக் மாவட்ட காவல்துறை அதிகாரியால் அழைக்கப்படுகிறார்.

ஜோசப் குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணையும் நடத்துகிறார். கொலை நடந்த இடத்தில் இருந்தவர்களை விசாரிக்கையில், மனு என்ற இளைஞன் வீட்டுக்கு பால் கொடுக்க வந்தபோது, சம்பவத்தை முதன்முதலில் நேரில் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரியவருக்கிறது.

ஜோசப், குற்றம் நடந்த இடத்தில் இருந்த உறுப்பினர்களை விசாரித்த பின்னர், குற்றம் நடந்த இடத்தில் இருந்து சடலத்தை அகற்ற உதவிய தொழிலாளி ஒருவருடன் மது அருந்தச் செல்கிறார். மனுவின் வீட்டிற்கு சென்று மது அருந்துவது என்று முடிவு செய்கிறார்கள். பிறகு தனக்கு ஒரு பெப்சி வாங்கி வருமாறு மனுவை அனுப்புகிறார்.

மனு திரும்பி வரும்போது அவன் வீட்டில் போலீஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான், ஜோசப் மனுவை குற்றவாளியாக அறிவிக்கிறார். போலீசார் மனுவை கைது செய்தனர், மேலும் ஜோசப் பல்வேறு குற்ற தடயங்களை காவல்துறை உயர் அதிகாரியிடம் அளித்த பின்னர் ஜோசப் உண்மையில் நம்பகமானவர் என்று தெரியவருகிறது.

சில நாட்களுக்குப் பிறகு, ஜோசப் தனது மனைவியின் விபத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து, அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்கிறார். ஜோசப் இன்னும் ஸ்டெல்லா மீது காதல் கொண்டிருப்பதை அவனது நண்பர்கள் கண்டுபிடித்து, அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்று விசாரிக்கிறார்.

நினைவு மீட்புக் காட்சி: ஜோசப் சில ஆண்டுகளுக்கு முன்பு (ஜோசப்பின் திருமணத்திற்குப் பிறகு) ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிக்கச் சென்று பிணத்தைப் பரிசோதித்தபோது, அது தனது முன்னாள் காதலி லிசம்மாவின் (மாதுரி பிரகன்சா) சடலம் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

இந்தச் சம்பவம் உண்மையில் அவருக்கு நெருடலாக இருக்கிறது. இந்த உண்மையை தனது மனைவியிடம் சொல்வதற்கு தடுமாறுகிறார். விரைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். நாளடைவில் தனது மனைவியுடன் கொண்டிருந்த ஆரோக்கியமான மண உறவை முறித்துக் கொள்கிறார்.

பின்னர் காட்சி நிகழ்காலத்திற்கு மாறுகிறது. ஸ்டெல்லா மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவரது உறுப்புகளை தானம் செய்யும்படி ஜோசப்பை மருத்துவர் கோரகிறார். ஆனால் ஸ்டெல்லா கொலை செய்யப்பட்டதாக கிடைத்த உண்மைகளிலின் அடிப்படையில் தெளிவாகிறது. ஸ்டெல்லாவின் கொலை மர்மம் குறித்து அவர் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

  • ஜோஜு ஜார்ஜ், ஜோசப் பாறேக்காட்டிலாக, ஓய்வு பெற்ற போலீஸ்காரர்
  • ஜோசப்பின் முன்னாள் மனைவி ஸ்டெல்லா பீட்டராக ஆத்மியா ராஜன்
  • தயானா ஜோசப், ஜோசப் மற்றும் ஸ்டெல்லாவின் மகளாக மாளவிகா மேனன்
  • திலீஷ் போத்தன் ஸ்டெல்லாவின் கணவன் பீட்டராக,
  • லிசம்மாவாக மாதுரி பிரகன்சா, ஜோசப்பின் முன்னாள் காதலி
  • ஜோசப்பின் தோழி சுதியாக சுதி கொப்பா
  • ஜோசப்பின் நண்பரான டி.சித்தீக்காக இர்ஷாத்
  • ஜோசப்பின் நண்பராக ஜேம்ஸ் எலியா
  • ஜோசப்பின் நண்பனாக கிஜான்
  • நெடுமுடி வேணு அட்வ. சீனிவாசன்
  • சர்ச் பாதிரியாராக ஜானி ஆண்டனி
  • ஜாஃபர் இடுக்கி சர்ச் பாதிரியார்
  • டீக்கடை உரிமையாளராக பிட்டோ டேவிஸ்
  • விஸ்வநாதனாக ராஜேஷ் சர்மா
  • எஸ்பி வேணுகோபாலாக அனில் முரளி
  • கார் உரிமையாளராக இடவேல பாபு
  • இதய நோய் நிபுணராக பிரேம் பிரகாஷ்
  • ரேணுகாவாக சோனியா எம்.எஸ்.(ஜோசப்பின் மகளின் இதயத்தைப் பெற்ற பெண்)

இசை

பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் மற்றும் பாக்யராஜ் (பாண்டு பாடவரம்பத்திலோடு) இசையமைத்துள்ளனர், படத்தின் இசையமைப்பாளர் அனில் ஜான்சன் ஆவார்.

# பாடல்Singer(s) நீளம்
1. "Poomuthole (Version I)"  Niranj Suresh 5:20
2. "Poomuthole (Version II)"  விஜய் யேசுதாஸ் 5:20
3. "Karineela Kannulla"  Karthik, Akhila Anand 4:19
4. "Pandu Paadavarambathiloode"  Joju George & Benedict Shine 4:11
5. "Uyirin Naadhane"  விஜய் யேசுதாஸ் & Merin Gregory 4:48
6. "Kannethaa Dooram"  விஜய் யேசுதாஸ் 5:07

திரையிடல்

படம் 16 நவம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது.

திரைப்பட வருமானம்

ஜோசப் வணிக ரீதியாக வெற்றியடைந்தது மற்றும் திரையரங்குகளில் 125 நாட்கள் ஓடியது.[5]

சர்ச்சை

குறிப்பாக கடுமையான சட்டங்கள் காரணமாக கேரளாவில் சமீப ஆண்டுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் குறைந்து வருவதன் பின்னணியில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஊழலுக்காக நன்கொடையாளர்களின் கொலையை உள்ளடக்கிய ஒரு சதியை சித்தரிப்பதற்காக இந்திய மருத்துவ சங்கத்தால் படம் விமர்சிக்கப்பட்டது.[6] தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், எழுத்தாளர் ஷாஹி கஹிர், மிருதசஞ்சீவனி [கேரளா நெட்வொர்க் ஃபார் ஆர்கன் ஷேரிங், மாநில அரசின் திட்டம்] பற்றி ஒரு பயத்தை உருவாக்க விரும்பவில்லை, மாறாக ஒரு குற்றத்தைத் தடுக்கும் முயற்சி என்று பதிலளித்தார். சமூக ஊடகங்கள் உட்பட பொது தளங்களில் உறுப்பு தானம் பற்றிய பல விவாதங்களுக்கு பிறகு இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது..

விருதுகள்

விருதுகள் வகை பெறுபவர்
தேசிய திரைப்பட விருதுகள் சிறப்பு குறிப்பு ஜோஜு ஜார்ஜ்
கேரள மாநில திரைப்பட விருதுகள் சிறந்த குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ்
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) விஜய் யேசுதாஸ்
சிறந்த பாடலாசிரியர் பி.கே.ஹரிநாராயணன்
மூவி ஸ்ட்ரீட் திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் ஜோஜு ஜார்ஜ்
சிறந்த இசை இயக்கம் ரஞ்சின் ராஜ்
சிறந்த பின்னணி இசை அனில் ஜான்சன்
பிலிம்பேர் விருதுகள் தென் சிறந்த நடிகர் ஜோஜு ஜார்ஜ்
சிறந்த பின்னணி பாடகர் - ஆண் விஜய் யேசுதாஸ்
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான SIIMA விருது விஜய் யேசுதாஸ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோசப்_(2018_திரைப்படம்)&oldid=29679" இருந்து மீள்விக்கப்பட்டது