ஜே. எம். சாலி


ஜே. எம். சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார்.

ஜே. எம். சாலி
ஜே. எம். சாலி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஜே. எம். சாலி
பிறந்ததிகதி ஏப்ரல் 10 1939
அறியப்படுவது எழுத்தாளர்

எழுதிய நூல்கள்

  • கனாக் கண்டேன் தோழி
  • விலங்கு
  • அலைகள் பேசுகின்றன
  • தமிழகத்துத் தர்க்காக்கள்
  • மாநபி கண்ட மருத்துவம்
  • குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி
  • புரூஸ்லி
  • வெள்ளைக் கோடுகள்
  • நோன்பு

உட்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது 2015
  • கண்ணன் சிறுவர் இதழ் நடத்திய நாவல் போட்டிப் பரிசு
  • தமிழக அரசின் பரிசு (இருமுறை)
  • காரைக்காலில் நடைபெற்ற 3ம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் பாராட்டு விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=ஜே._எம்._சாலி&oldid=6064" இருந்து மீள்விக்கப்பட்டது