ஜேப்பியார்

ஜேப்பியார் ( Dr. Jeppiaar) (11 ஜூன் 1931 - 18 ஜூன் 2016), ஓர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும், தொழிலதிபரும் ஆவார் புகைப்படத்திற்கு நன்றி tamil.oneindia.com . திருவிதாங்கூர்- கொச்சி மாகாணத்திலிருந்த நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள முட்டம் என்ற இடத்தில் பிறந்தார் . இப்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது.

முனைவர் ஜேப்பியார்
முனைவர் ஜேப்பியார்.jpg
பிறப்பு(1931-06-11)11 சூன் 1931
முட்டம், நாகர்கோவில்
இறப்பு18 சூன், 2016 (வயது 85)
சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியா
துறைதொழில்முன்ழிவோர், கல்வியாளர்
கல்வி கற்ற இடங்கள்அண்ணா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர்
விருதுகள்தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளின் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் சார்பில் கௌரவ கர்னல் பதவி
துணைவர்இரெமிபாய் ஜேப்பியார்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை சட்டத்தையும் (பி.எல்) அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சியையும் முடித்தார். இவர் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்-, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்- வேந்தராக இருந்தார். தமிழகத்தின் நிபுணத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

இவர், தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியை தனியார்மயமாக்குவதில் முன்னோடிகளில் ஒருவர். இவரது நிகர சொத்து மதிப்பு 2016 இல் 3,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை

ஜேப்பியார் கத்தோலிக்கக் கிறிஸ்தவ குடும்பத்தில் முக்குவரான இயேசுஅடிமை - பனிமலர் அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தாயின் பெயரில் பனிமலர் கல்வி நிறுவனங்களுக்கு பெயரிட்டார். இவர், ம. கோ. இராமச்சந்திரனின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்பட்டது.

அரசியல் வாழ்க்கை

ம. கோ. இராமச்சந்திரன் ஆட்சியின் போது, இவர் தமிழக சட்டமன்றத்தின் அரசாங்க தலைமை கொறடாவாக செயல்பட்டார். 1972 முதல் 1987 வரை சென்னை மாவட்ட அதிமுக கட்சியின் செயலாளராகவும் பணியாற்றிய இவர் முதல்வருக்கு சிறப்பு தூதராக இருந்தார்.

வகித்த பதவிகள்

  • சென்னை நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (மெட்ரோ நீர்) தலைவர்.
  • சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக கௌரவ சேவைகள்
  • தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர்.

இறப்பு

18 ஜூன் 2016 அன்று, தனது 85 வயதில் இறந்தார்.[1] [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜேப்பியார்&oldid=10326" இருந்து மீள்விக்கப்பட்டது