ஜெயா மாதவன்

ஜெயா மாதவன் (Jaya Madhavan பிறப்பு: அக்டோபர் 1, 1972) இந்திய எழுத்தாளர், கவிஞர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். [1] [2]

ஜெயா மாதவன்
JAYA MADHAVAN.jpg
இயற்பெயர் ஜெயா மாதவன்
பிறந்ததிகதி 1 அக்டோபர் 1972 (1972-10-01) (அகவை 52)
பிறந்தஇடம் சென்னை, இந்தியா
பணி எழுத்தாளர்
காலம் 1998 முதல் தர்போது வரை
வகை புதினம், வரைகதை
இணையதளம் jayamadhavan.blogspot.com

வாழ்க்கை

ஜெயா மாதவன் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் கேந்திரியா வித்யாலயாவில் படித்தார் மற்றும் சென்னை ராணி மேரிஸ் கல்லூரியில் இலக்கியம் பயின்றார், இவர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முன்னாள் மாணவி, 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார், [3] இவர் சீதா துரைசாமியின் பேத்தி ஆவார். [4] [5]

சில படைப்புகள்

  • சீதா அண்ட் தெ ஃபார்ச்ட் பண்டிட்ஸ், சிபிடி,ISBN 9788170119777
  • கபீர் தி வீவர்-போயட், துலிகா புத்தகங்கள்,ISBN 9788181461681
  • தி பீகாக்ஸ் கிரை, யுனிசூன் ஆன்டாலஜிஸ்,ISBN 9788188234233
  • தெ கர்ஸ் ஆஃப் தெ பேர்ட் அண்ட் அதர் பரனார்மல் ஸ்டோரிஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2009,ISBN 9788188234547
  • வின்னர்ஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2005,ISBN 9788188234110

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெயா_மாதவன்&oldid=27544" இருந்து மீள்விக்கப்பட்டது