ஜி. வி. பிரகாஷ் குமார்

ஜி. வி. பிரகாஷ் குமார் (G. V. Prakash Kumar, பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் [1] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.

ஜி. வி. பிரகாஷ் குமார்
GV Prakash Kumar at Komban Success Meet.jpg
பிறப்புசூன் 13, 1987 (1987-06-13) (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஜி. வி. பி
பணிதிரைப்பட நடிகர், திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2006 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சைந்தவி

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.ivar underrated music director.

திரைப்பட விவரம்

இசையமைத்துள்ள திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2008 குசேலன் அவராகவே "சினிமா சினிமா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் அவராகவே "காலேஜ் பாடம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை அவராகவே
2013 தலைவா நடனம் ஆடுபவர் "வாங்கண்ணா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2015 டார்லிங் கதிர்
2015 திரிஷா இல்லனா நயன்தாரா
2016 பென்சில் பின்தயாரிப்பு

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜி._வி._பிரகாஷ்_குமார்&oldid=7988" இருந்து மீள்விக்கப்பட்டது