ஜி. எம். சுந்தர்

ஜி. எம். சுந்தர் (G. M. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏராளமான தமிழ் படங்களில்ர் நடித்துள்ளா. உருமற்றம் என்ற படத்தின் வழியாக தயாரிப்பாளராகவும் ஆனார்.

ஜி. எம். சுந்தர்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986–2005; 2016–தற்போது வரை

தொழில்

இவர் அடையாறு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் நடிப்பை பயின்றார். புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குனர் கே. பாலச்சந்தர் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.[1]

பின்னர், சுந்தர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா போன்ற படங்களில் நடித்தார்.[2]

இப்படங்களைத் தவிர, பி. லெனின் இயக்கி தேசிய விருது பெற்ற ஊருக்கு நூறு பேர் திரைப்படத்தில் சுந்தர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[3] சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருதை வென்ற உருமாற்றம் என்ற குறும்படத்தை தயாரித்து நடித்தார்.[4]

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் சுந்தர் தனது நடிப்பு வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.[3]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1986 புன்னகை மன்னன்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
1988 சத்யா சுந்தர்
1990 புலன் விசாரணை
காவலுக்குக் கெட்டிக்காரன் பண்ணீர்
1991 கிழக்கு கரை
நண்பர்கள் பீடா
1992 தங்க மனசுக்காரன் துரைப்பாண்டி
1993 பொன்னுமணி
1994 அதர்மம்
1998 கிழக்கும் மேற்கும்
2002 உருமாற்றம் தயாரிப்பாளருமாக
2003 ஊருக்கு நூறு பேர் ஆனந்தன்
2005 தொட்டி ஜெயா சந்தானம்
2011 சங்கரன்கோவில்
2016 காதலும் கடந்து போகும் திலகர்
2017 பொதுவாக எம்மனசு தங்கம் தர்மலிங்கம்
2018 சீதக்காதி தனபால் வழக்கறிஞர்
2019 மகாமுனி ஊழல் காவல் அதிகாரி
2021 மண்டேலா ரத்னம்
சார்பட்டா பரம்பரை துரைக்கண்ணு வாத்தியார்
ரைட்டர் வழக்கறிஞர் மருதமுத்து
2022 வலிமை ஐஜி அரசு
2022 ஜன கண மன நாகேஸ்வர ராவ் மலையாளப் படம்
2022 விருமன் ச.ம.உ பத்தினெட்டாம்பாடியன்
2023 துணிவு முத்தழகன்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜி._எம்._சுந்தர்&oldid=22190" இருந்து மீள்விக்கப்பட்டது