ஜாலி ஆபிரகாம்

ஜாலி ஆபிரகாம் (Jolly Abraham) என்பவர் ஒரு இந்திய ஸ்தோத்திர பாடகர் [1] மற்றும் மலையாள திரைப்பட பாடகராவார்.[2] இவர் 1970 கள் மற்றும் 1980 களில் 100 க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படப் பாடல்களைப் பாடினார். சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது முதல் பாடல் 1973 இல் சட்டம்பிகல்யாணிக்காக ஆகும். இவர் எர்ணாகுளம், கும்பலத்தில் பிறந்தார். கொச்சியின் சேக்ரட் ஹார்ட் கல்லூரி தேவராவில் பி. எஸ். சி தாவரவியலில் பட்டம் பெற்றவர் . இவர் ஒரு சில தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். திருமணமான இவர் சென்னையில் வசிக்கிறார்.

ஜாலி ஆபிரகாம்
ஜாலி ஆபிரகாம்.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புஇந்திய ஒன்றியம், கேரளம், கொச்சி
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர், நடிகர்
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்1973–1996
வெளியீட்டு நிறுவனங்கள்Audiotracs
இணையதளம்http://jolleeabraham.com/


நடிகராக

  • ஆக்ரமனம் (1981)
  • கிளிஞ்சல்கள் (1981) (தமிழ் திரைப்படம்)
  • ஆடுவாஞ்சி உலஞ்சப்போல் (1984)

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜாலி_ஆபிரகாம்&oldid=9114" இருந்து மீள்விக்கப்பட்டது