ஜமீன் தேவர்குளம்

ஜமீன் தேவர்குளம் தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி வட்டத்தில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில்[1]உள்ள ஊர். இது இளையரசேனந்தல் வருவாய் பிர்காவில் (வட்டத்தில்) [2], 1500 பேர்கள் கொண்ட ஊராட்சியாகும். இவ்வூராட்சி 4 ஆண் உறுப்பினர்களாலும் 2 பெண் உறுப்பினர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வூராட்சியின் பொது இடங்களில் அரசியல், மதம், சாதியம் சார்ந்த அடையாளங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு, கற்காரையால் பாவப்பட்ட தெருக்களில் மின் விளக்குகளும், காண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீனக் கழிப்பறைகளும் குளியலறைகளும் கொண்ட மிகவும் துப்புரவான ஊராட்சி பகுதியாகும்.

மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரி ஊராட்சியாக, ஜமீன் தேவர்குளம் ஊராட்சியின் செயல்பாடு அமைந்துள்ளது.[3].

மேற்கோள்கள்

  1. "Thoothukudi District - Kovilpattai Taluk Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2015.
  2. http://www.dinamani.com/latest_news/article629735.ece?service=print
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-31. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
"https://tamilar.wiki/index.php?title=ஜமீன்_தேவர்குளம்&oldid=41513" இருந்து மீள்விக்கப்பட்டது