ஜதி (திரைப்படம்)
ஜாதி (Jathi ) என்பது 2005ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். விஜயராகவா இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சத்யா, சுஜிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், நிழல்கள் ரவி, சீதா, ராஜீவ், அம்பிகா, அபிநயசிறீ, அஜய் ரத்னம், அழகு, ரஜினி நிவேதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தை பி. சித்திரைத் செல்வன், கே. எஸ். ராதா ஆகியோர் தயாரித்தனர். அக்னி கலைவாணி இசையமைத்தார். படம் 18 மார்ச் 2005 இல் வெளியானது [1][2][3]
ஜதி | |
---|---|
இயக்கம் | ஆர். விஜயராகவா |
தயாரிப்பு | பி. சித்திரைச்செல்வன் கே. எஸ். இராதா |
கதை | ஆர். விஜயராகவா சிறீவெங்கர் |
இசை | அக்னி கலைவாணி (பாடல்கள்) சத்யா (பின்னணி இசை) |
நடிப்பு | சத்யா சுஜிதா |
ஒளிப்பதிவு | பி. சித்திரைச்செல்வன் |
படத்தொகுப்பு | எஸ். அசோக் மேத்தா |
கலையகம் | செவன் ஹார்ஸ் பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 18, 2005 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யா சிவாவாக
- சுஜிதா கவிதாவாக
- நிழல்கள் ரவி சிவாவின் தந்தை தீனதயாளனாக
- சீதா கவிதாவின் தாயாக
- ராஜீவ் நெடுமாறனாக
- அம்பிகா சிவாவின் தாயாக
- அபிநயசிறீ பிரியாவாக
- அஜய் ரத்னம் காவல் ஆய்வாளராக
- அழகு பிரியாவின் தந்தையாக
- ரஜினி நிவேதா பிரியாவின் தாயாக
- சரத் பரத்தாக
- இராஜா
- குரு
- அஜய்
- சஞ்சித்
- கோபி கோபியாக
- வைசாக் ரவி
- புவண்
- ஜெய்
- லேகாசிறீ சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
செவன் ஹார்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட ஜதி படத்தின் வழியாக ஆர். விஜயராகவா இயக்குனராக அறிமுகமானார். நடன நடன இயக்குனர் கலா நடத்தும் நடிப்புப் பள்ளியில் படித்து வெளிவந்த சத்யா முதன்மை ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். அவரது காதலியாக நடிக்க சுஜிதா தேர்வு செய்யப்பட்டார். அம்பிகா, சீதா, நிழல்கள் ரவி, அழகு, ராஜீவ், அஜய் ரத்னம் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடிக்க தேர்வுசெய்யபட்டனர். இப்படத்தில் இசையமைப்பாளராக அக்னி கலைவாணி அறிமுகமாகியுள்ளார். டி. ராஜன் கலை இயக்கம் மேற்கொள்ள, எஸ். அஷோக் மேத்தா படத்தொகுப்பையும், சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தார். அயர்லாந்து, ராஜஸ்தானில் இரண்டு பாடல்கள் படமாக்ககபட்டன. படம் குறித்து பேசிய திரைப்பட இயக்குனர், “நாயகனின் தாய்க்கு இசை மீது ஆர்வம் உண்டு, எனவே அதற்கு பொருத்தமாக படத்தின் பெயர் உள்ளது. இது ஒரு காதல் கதை, இதில் ஒரு சிறிய தவறு பனிப்பந்து உருண்டு பெரியதாக மாறுவதுபோல ஒரு பெரிய சிக்கலாக மாறுகிறது ".[3][4]
இசை
திரைப்படத்திற்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் அக்னி கலைவாணி அமைத்தார். 17 திசம்பர் 2004 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில் 11 பாடல்கள் உள்ளன.[5][6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "காட் கிப் டைம்" | காந்தி | 3:35 | |||||||
2. | "கனவிலேயே தேடிப்பார்க்கிறேன்" | ஹரிஷ் ராகவேந்திரா | 4:36 | |||||||
3. | "சைதாபேட்டை ரங்கராட்டிணம்" | அனுராதா ஸ்ரீராம் | 4:54 | |||||||
4. | "தெய்வங்கள் தோற்றதோ" | காந்தி | 1:37 | |||||||
5. | "காதலே காதலே" | பிரபாகர் | 5:26 | |||||||
6. | "ஷையோ ஷையோ" | திப்பு | 3:59 | |||||||
7. | "வெண்ணிலா கண்களில்" | ஸ்ரீநிவாஸ், மஹதி (பாடகி) | 5:04 | |||||||
8. | "தலைப்பு இசை" | 1:32 | ||||||||
9. | "நெஞ்சை திறந்தது யார்" | ஜி. காயத்திரி தேவி | 4:03 | |||||||
10. | "விண்ணை தொடடா" | ரஞ்சித், ஜி. காயத்திரி தேவி | 3:57 | |||||||
11. | "அத ஒத்துக்கடா" | திப்பு, ராஜலட்சுமி | 3:13 | |||||||
மொத்த நீளம்: |
41:56 |
குறிப்புகள்
- ↑ "Jathi (2004)". spicyonion.com. https://www.filmibeat.com/tamil/movies/jathi.html.
- ↑ "List of Tamil Films Released In 2005". lakshmansruthi.com இம் மூலத்தில் இருந்து 29 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110529192805/http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/2005.asp.
- ↑ 3.0 3.1 "Jathi". chennaionline.com இம் மூலத்தில் இருந்து 6 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051206070425/http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp.
- ↑ "Jathi". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 10 February 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050210021450/http://www.indiaglitz.com/channels/tamil/preview/7298.html.
- ↑ "Jadhi (2004) - Kalaivani". mio.to இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220316093915/https://mio.to/album/Jadhi+(2004).
- ↑ "Jadhi Songs". jiosaavn.com. https://www.jiosaavn.com/album/jadhi/wqJXrGi4iVk_.