ச. விக்னேசுவரன்

டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேசுவரன் எனும் விக்னேசுவரன் சன்னாசி (Vigneswaran s/o Sanasee; மலாய்: Vigneswaran Sanasee; சீனம்: 维涅斯瓦兰·萨纳西); என்பவர் 2004 மார்ச் மாதம் தொடங்கி 2008 மார்ச் வரையில் சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை தொகுதியின் (Kota Raja Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்தவர்.[1]

மாண்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
ச. விக்னேசுவரன்
YB Vigneswaran Sanasee

மலேசிய நாடாளுமன்ற மேலவை தலைவர்
PSM; SSAP; DPSM; SMS
மலேசிய மேலவையின் 17-ஆவது தலைவர்
பதவியில்
26 ஏப்ரல் 2016 – 22 சூன் 2020
அரசர் அப்துல் ஆலிம்
முகமது V
சுல்தான் அப்துல்லா
மலேசிய இந்திய காங்கிரசு 10-ஆவது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 சூலை 2018
துணை மு. சரவணன்
முன்னவர் ச. சுப்பிரமணியம்
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர்
பதவியில்
2021–2022
மலேசியப் பிரதமரின் தென் ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 2021
சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2004 – மார்ச் 2008
தனிநபர் தகவல்
பிறப்பு Vigneswaran s/o Sanasee
16 திசம்பர் 1965 (1965-12-16) (அகவை 58)
கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி மஇகா (MIC)
பிற அரசியல்
சார்புகள்
பாரிசான் (BN)
பெரிக்காத்தான் PN
வாழ்க்கை துணைவர்(கள்) சுசிதா பெரியசாமி
படித்த கல்வி நிறுவனங்கள் இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகம்
(Staffordshire University)
மலாயா பல்கலைக்கழகம்
(University of Malaya)
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்

26 ஏப்ரல் 2016 ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து 2020 சூன் 22-ஆம் தேதி வரையில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை தலைவராக (President of the Senate) பதவி வகித்தவர். அத்துடன் 2021 நவம்பர் மாதம் தொடங்கி மலேசியப் பிரதமரின் தென் ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் பதவியையும் (Special Envoy of the Prime Minister to South Asia) வகித்து வருகிறார்.[2]

பொது

2018 சூலை 14-ஆம் தேதி தொடங்கி, பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் (Malaysian Indian Congress) 10-ஆவது தலைவராகப் பதவி வகித்து வரும் இவர், 2021-ஆம் ஆண்டில் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் பதவியையும் (Parliamentary Secretary of Ministry of Youth and Sports) வகித்தவர் ஆகும்.[3][4]

2004 -ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை தொகுதியில் (Kota Raja Federal Constituency) போட்டியிட்டு 8,239 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி அடைந்தார்.

எனினும் 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2008 Malaysian General Election) அதே கோத்தா ராஜா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு; மலேசிய இஸ்லாமிய கட்சியை (Pan-Malaysian Islamic Party) சேர்ந்த சித்தி மரியா மகமுட் (Siti Mariah Mahmud) என்பவரிடம் தோல்வி கண்டார்.[5][6]

பொது

விக்னேசுவரனின் தந்தையார் சன்னியாசி, 1980-களில் முன்னாள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும். அத்துடன் மஇகாவின் மாநிலத் தலைவர் பதவியையும் வகித்தவர்.

இவரின் உறவினர் டத்தோ செல்லத்தேவன் (Sellathevan Muthusamy), முன்னாள் மஇகா இளைஞர் அணித் தலைவராகவும்; 1990-களில் சிலாங்கூர் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். விக்னேசுவரனின் குடும்பம் கிள்ளான் துறைமுகப் பகுதியில் வணிக நிர்வாகங்களைக் கொண்டுள்ளது.

விருதுகள்

மலேசிய விருதுகள்

  •   மலேசியா :
    •   மலேசியப் பேரரசர் விருது - (Order of Loyalty to the Crown of Malaysia) (PSM) – Tan Sri (2017)[7][8]
  •   மலாக்கா :
    •   மலாக்கா மாநில ஆளுநர் விருது - (Companion Class II of the Exalted Order of Malacca) (DPSM) – Datuk (2013)[7]
  •   பகாங் :
    •   பகாங் மாநில அரசர் விருது - (Grand Knight of the Order of Sultan Ahmad Shah of Pahang) (SSAP) – Dato' Sri (2015)[7]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ச._விக்னேசுவரன்&oldid=25065" இருந்து மீள்விக்கப்பட்டது