ச. மெய்யப்பன்

ச. மெய்யப்பன் தமிழகப் பதிப்பாளரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் பல தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் தமிழுக்கென்று ஏறத்தாழ 40,000 நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை சிதம்பரத்தில் அமைத்தவர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன்
தனிநபர் தகவல்
பிறப்பு இராமச்சந்திராபுரம், கடியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
பெற்றோர் குங்கிலியம் சண்முகனார்
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலை பல்கலைகழகம்.
பணி தமிழ் பேராசிரியர், அண்ணாமலை பல்கலைகழகம்
தொழில் மணிவாசகர் பதிப்பகம்

மெய்யப்பன் பதிப்பகம்

சமயம் இந்து
விருதுகள் தமிழவேள், பதிப்புச்செம்பல், செந்தமிழ் காவலர்

நூல்கள் வெளியிடல்

இவர் தமிழ் நூல்கள் வெளியிடுவதற்காக மணிவாசகர் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தைத் தொடங்கினார். இதன் வழியாகப் பல தமிழ் நூல்களை வெளியிட்டிருக்கிறார். பள்ளி மாணவர்களுக்காக "வெற்றித் துணைவன்" எனும் பெயரில் பாட நூல்களுக்கான கையேடுகளை வெளியிட்டுள்ளார். இவரை "பதிப்புச் செம்மல்" என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். சிதம்பரத்தில் இவருடைய பெயரிலேயே மெய்யப்பன் பதிப்பகம் எனும் பெயரிலும் ஒரு பதிப்பகம் நிறுவப்பட்டுள்ளது.

விருதுகள்

  • குன்றக்குடி அடிகளார் இவருக்கு “தமிழவேள்” என்றும், தருமபுரம் ஆதீனத் தலைவர் “செந்தமிழ்க் காவலர்” என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
"https://tamilar.wiki/index.php?title=ச._மெய்யப்பன்&oldid=16626" இருந்து மீள்விக்கப்பட்டது