ச. முனிசுவாமிப் பிள்ளை
ச. முனிசுவாமிப் பிள்ளை (S. Muniswami Pillai; 1903 - நவம்பர் 10, 1956, டர்பன்) இலங்கையில் பிறந்து தென்னாப்பிரிக்காவிற் தமிழ்ப்பணி புரிந்த தமிழறிஞரும், நூலாசிரியரும், பத்திரிகாசிரியரும் ஆவார்.[1]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ச. முனிசுவாமிப் பிள்ளை |
---|---|
பிறந்ததிகதி | 1903 |
பிறந்தஇடம் | இலங்கை |
இறப்பு | (அகவை 53) |
அறியப்படுவது | தமிழறிஞர், நாடகாசிரியர், ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
1903 ம் ஆண்டில் இலங்கையில் சி. சங்கரன்பிள்ளை, ஆதிலட்சுமி ஆகியோருக்குப் பிறந்த இவர்,[2] தென்னாப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்.[1] டர்பன் நகரில் தமிழ்க் கழகங்களை ஏற்படுத்தியதுடன், தென்னாப்பிரிக்கத் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2] அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணியற்றினார்.[2] பராசர மலர், செந்தமிழ்ச் செல்வன், தமிழ் மணி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவிருந்து பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[1] சில நாடக நூல்களைத் தமிழில் எழுதியும், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மாணவர்கள் நடிப்பதற்கு வழங்கினார்.[2][1] இவர் எழுதி நடிக்கப்பெற்ற 'இளங்கோவன்', 'சந்திரசேகரன்', பல்வைத்திய நிபுணர்', 'வெனிசு தேசத்து வணிகன்', 'மதிவாணன்', 'காணாமற்போன கணையாழி', 'துர்ச்செயலின் முடிவு' ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.[2] பாலர் பாடல் என்னும் செய்யுள் நூலை மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார். பாரதியார் நாள் முதன் முதலாகத் தென்னாபிரிக்காவில் இவரின் முயற்சியாலேயே கொண்டாடப்பட்டது.[1] தமிழ்நாடு மற்றும் இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.[1]