ச. சண்முகநாதன் (இலங்கை அரசியல்வாதி)

சரவணபவானந்தன் சண்முகநாதன் (வசந்தன் என அறியப்பட்டவர்) (16 மே 1960 - ஜூலை 1998) இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

சண்முகநாதன் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பிறந்தார்.[1] இவர் மக்கள் விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். இவ்வமைப்பின் வவுனியாவுக்கான தளபதியாக பணியாற்றினார்.[2]

சண்முகநாதன், வவுனியா மாநகர சபையின் உறுப்பினராக இருந்தார்.[3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

1998 ஜூலை 15 அன்று வவுனியா மாவட்டம் இரம்பைக்குளத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்காக விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[5] ஆனால் தமிழ்நெட், மக்கள் விடுதலை இயக்கத்தின் உள் மோதலால் சண்முகநாதன் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

மேற்கோள்கள்