சௌமியா நாராயணசாமி

சௌமியா நாராயணசாமி, (பிறப்பு 25 ஜூலை 2000) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சர்வதேச கால்பந்து வீராங்கனை ஆவார். கோகுலம் கேரளா, சேது கால்பந்து சங்கங்களுக்காகவும் இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணிக்காகவும் விளையாடி வருகிறார். [1]

சௌமியா நாராயணசாமி
சுய தகவல்கள்
பிறந்த நாள்25 சூலை 2000 (2000-07-25) (அகவை 24)
பிறந்த இடம்சேலம், தமிழ்நாடு, இந்தியா
ஆடும் நிலை(கள்)கோல் காப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
கோகுலம் கேரளா கால்பந்து சங்கம்
எண்31
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2019–2022சேது கால்பந்து சங்கம்16(0)
2022–கோகுலம் கேரளா கால்பந்து சங்கம்
பன்னாட்டு வாழ்வழி
2018இந்திய பெண்கள் தேசிய 20 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி
2019–இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணி2(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

விளையாட்டு வாழ்க்கை

ஜூனியர் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தனது கோல் காக்கும் திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ள சௌமியா, 2018 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த AFC U19 தகுதிச் சுற்றில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார். அப்போது பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் எந்தவொரு பந்தையும் கோல் அடிக்க விடாமல் தடுத்ததன் முலமாக தேர்வுக்குழுவினரின் பாராட்டைப் பெற்று, இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

சௌமியா தனது கால்பந்து சங்க வாழ்க்கையின் முதல் கோப்பையை மதுரையின் சேது கால்பந்து சங்கத்தின் சார்பாக விளையாடிய 2019 ஆம் ஆண்டின் இந்திய மகளிர் லீக் பருவ விளையாட்டில் வென்றுள்ளார். [3]

மகளிருக்கான ஆசிய கால்பந்து கோப்பை தொடர் 2023 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றுள்ளது. இதில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இந்த அணியில் ஐந்து தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க அணியில் சௌமியாவும் இடம்பெற்றுள்ளார். [4]

Honours

இந்தியா

  • SAFF பெண்கள் சாம்பியன்ஷிப் : 2019

சேது எஃப்.சி

  • இந்திய மகளிர் லீக் : 2018–19

தமிழ்நாடு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சௌமியா_நாராயணசாமி&oldid=25652" இருந்து மீள்விக்கப்பட்டது