சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன் ஒரு இந்திய குழந்தைநல மற்றும் காச நோய் ஆராய்ச்சி மருத்துவர் ஆவார்[1][2]. இவர் அக்டோபர் 3, 2017 அன்று உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்[3]. இதற்கு முன்பு இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் இயக்குனராகவும் பணியாற்றினார்.
சௌமியா சுவாமிநாதன் | |
---|---|
சௌமியா சுவாமிநாதன் | |
பிறப்பு | 2 மே 1959 கும்பகோணம் , இந்தியா |
இருப்பிடம் | புது டெல்லி, இந்தியா |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராணுவ மருத்துவக் கல்லூரி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் |
பெற்றோர் | எம். எஸ். சுவாமிநாதன் மீனா சுவாமிநாதன் |
மேற்கோள்கள்
- ↑ Nikita Mehta. "Soumya Swaminathan to take charge of Indian Council of Medical Research". Live Mint. http://www.livemint.com/Politics/15YIhftLoSDQDJQCpQ7OEP/Soumya-Swaminathan-to-take-charge-of-Indian-Council-of-Medic.html.
- ↑ "Dr. Soumya Swaminathan". இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை இம் மூலத்தில் இருந்து 2015-08-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150830075056/http://icmr.nic.in/icmrnews/Dr_Soumya_Swaminathan.pdf. பார்த்த நாள்: 2015-10-07.
- ↑ "WHO Headquarters Leadership Team" (in en-GB). http://www.who.int/dg/leadership-team/en/.