சோ. தர்மன்
சோ. தர்மன் (Cho. Dharman, பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். [4] 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சோ. தர்மன் |
---|---|
பிறப்புபெயர் | சோ. தர்மராஜ்[1] |
பிறந்ததிகதி | 8 ஆகத்து 1953 |
பிறந்தஇடம் | உருளைகுடி, கோவில்பட்டி, தமிழ்நாடு இந்தியா |
பணி | சிறுகதை எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2019)[2][3] |
பெற்றோர் | சோலையப்பன் பொன்னுத்தாய் |
பிறப்பு
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[4] ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பூமணி அவர்களின் மருமகன் இவர். சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர்.
நூல்கள்
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.[4]
புதினம்
- கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [4][5]
- சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
- தூர்வை (2017)
- பதிமூனாவது மையவாடி (2020)
சிறுகதைத்தொகுதிகள்
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி (2019)
- நீர்ப்பழி
வாழ்க்கை வரலாறு
வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
விருதுகள்
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[6]
- சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப்பெற்றார். [7][8]
- தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019.
மேற்கோள்கள்
- ↑ சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 20 டிசம்பர் 2019. https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html.
- ↑ சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 18 டிசம்பர் 2019. https://www.hindutamil.in/news/tamilnadu/530938-sakitya-academy-award-for-writer-so-dharman.html.
- ↑ B. Kolappan, தொகுப்பாசிரியர் (DECEMBER 19, 2019). Cho. Dharman wins Sahitya Akademi Award. The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/cho-dharman-wins-sahitya-akademi-award/article30342968.ece.
- ↑ 4.0 4.1 4.2 4.3 நூலக உலகம் மாத இதழ், 2019 திசம்பர், பக்.5
- ↑ "எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு" (in ta). https://tamil.indianexpress.com/literature/madras-high-court-mentioned-its-order-writer-so-dharman-facebook-status-222130/.
- ↑ பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு
- ↑ "Press Release sahitya Akademi awards 2019". http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf. பார்த்த நாள்: 18 December 2019.
- ↑ "சூல் நாவலுக்காகச் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html. பார்த்த நாள்: 18 December 2019.