சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்[1] (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மர் வடிவில் உள்ளார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1,305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும்.[2] இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் | |
---|---|
படிமம்:Sholingar (15).JPG | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | வேலூர் |
அமைவு: | தமிழ்நாடு, இந்தியா |
ஏற்றம்: | 177 m (581 அடி) |
ஆள்கூறுகள்: | 13°06′52.2″N 79°25′10.4″E / 13.114500°N 79.419556°ECoordinates: 13°06′52.2″N 79°25′10.4″E / 13.114500°N 79.419556°E |
கோயில் தகவல்கள் | |
உற்சவர்: | பக்தவச்சல பெருமாள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
அமைவிடம்
தமிழ்நாடு மாநிலம், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கபுரத்திற்குக் கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான, அடுத்தடுத்துள்ள, கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குன்றின் மேல் இருக்கிறது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும், கோயிலும் மலையும் பத்து மைல் தொலைவு வரை தெரியும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 177 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°06'52.2"N, 79°25'10.4"E (அதாவது, 13.114490°N, 79.419550°E) ஆகும்.
ஆஞ்சநேயர் கோவில்
இம்மலைக்குக் கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 படிகள் ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் உள்ளார்.[3]
நிழற் படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Yoga Narasimhar - Sholingar>Tamilnadu Temple>யோக நரசிம்மசுவாமி". temple.dinamalar.com.
- ↑ "இழந்ததையெல்லாம் தரும் யோக நரசிம்மர், யோக அனுமன்! - பிரமாண்ட சோளிங்கர் திருத்தல மகிமை". www.hindutamil.in.
- ↑ "சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்". www.maalaimalar.com.