சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. சோளிங்கர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோளிங்கரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,057 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,804 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,023 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்மாவரிபள்ளி
- அவுலரங்கபள்ளி
- பாலிகுப்பம்
- இளயநல்லூர்
- எருக்கம்பட்டு
- கொல்லப்பள்ளி
- கோவிந்தாச்செரி
- கோவிந்தாச்செரி குப்பம்
- ஜம்புகுளம்
- கடப்பந்தாங்கல்
- கல்லான்குப்பம்
- கரடிகுப்பம்
- கட்டராம்பாக்கம்
- கீரைசாத்து
- கேசவனன்குப்பம்
- கொடக்கால்
- கொளத்தேரி
- கொண்டமனைடுபாளையம்
- மதனக்குப்பம்
- மதிமண்டலம்
- மருதாலம்
- மேல்பாடி
- மீல்வீராணம்
- முத்தரசிகுப்பம்
- ஒழுகூர்
- பாண்டியநல்லூர்
- பரமசாது
- ரெண்டாடி
- பெருமாள்குப்பம்
- பொன்னை
- பொன்னப்பந்தாங்கல்
- புலிவலம்
- செக்காடிகுப்பம்
- செங்கல்நத்தம்
- சோமசுந்தரம்
- தாகாரகுப்பம்
- தாலங்கி
- தாங்கல்
- தென்பள்ளி
- வாங்கூர்
- வன்னம்பள்ளி
- வள்ளிமலை
- வேலம்
- வெங்கடாபுரம்
- வெப்பாலை