சோக்கல்லோ சண்முகநாதன்

சோக்கல்லோ
சண்முகநாதன்
Sokkallo Shan.jpg.jpg
முழுப்பெயர் சண்முகநாதன்
பிறப்பு 01-08-1935
பிறந்த இடம் ஏழாலை,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
கனடா
அறியப்படுவது வில்லுப்பாட்டு
கலைஞர்


சோக்கல்லோ சண்முகநாதன் (ஏழாலை, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு ஆகஸ்ட் 1, 1935) மேடை நாடகம், வில்லுப்பாட்டு கலைஞர். எழுத்தாளர். "சோக்கல்லோ" என்பது இவரது பட்டப்பெயராகும். 65 ஆண்டு கால நாடகத்துறை அனுபவமுடையவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார்.

வானொலியில்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நாடகங்கள், வில்லுப்பாட்டு, ஆலயத்திருவிழாக்களில் நேர்முகவர்ணனை, கிராமிய நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்றியவர்.

மேடை நாடகங்கள்

1945ம் ஆண்டில் தனது 10வது வயதில் "சிறீமுருகன்" என்ற மேடை நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர். தொடர்ந்து "குணம் குன்றினால்", "சீதனம்", "அடிப்பேன் பல்லுடைய" போன்ற மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரது "சோக்கல்லோ நகைச்சுவைகதம்பம்" புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.

குழந்தை சண்முகலிங்கத்தின் "எந்தையும் தாயும்", மஹாகவி உருத்திரமூர்த்தியின் "கோடை", "பிறந்தமண்" ஆகிய நாடகங்கள் இவருக்கு புகழ் சேர்த்தன.

வில்லுப்பாட்டில்

அண்மைக்காலம் வரை, கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இவரது வில்லுப்பாட்டுக்குழுவினர் பின்வரும் தலைப்புக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.

  • மகாகவியின் கண்மணியாள் காதை
  • ராமகிருஷ்ண்பரமஹம்சர்
  • ஒளவையார்
  • கவிராஜன் கதை
  • சக்தி மஹிமை
  • சத்யசாயிபாபா
  • கண்னதாசனின் இயேசு காவியம்
  • சுவாமி விபுலானந்தர்
  • பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
  • எம்.ஜி.இராமச்சந்திரன்

விருதுகள்

“மக்கள் கலைஞன்”, சமாதான நட்சத்திரம்”, “தேசத்தின் கண்”, “கலாபூஷணம்”, “கலைச்சித்தர்” போன்ற கௌரவங்களைப் பெற்றிருக்கிறார். "எந்தையும் தாயும்'" நாடகத்தில் இவரது நடிப்பிக்காக இலங்கைக் கலைக்கழகத்தின் சிறந்த நடிகருக்கான 2007ஆம் ஆண்டு விருது இவருக்குக் கிடைத்தது. உலக சாதனைக்காக ஏழு மணி நாற்பது நிமிடமாக குறிப்புகள் எதுவுமின்றி “நானும் தமிழும்” என்ற மகுடத்தில் தொடர்ந்து பேசியவர்.

தொலைக்காட்சியில்

இலங்கையில் ரூபவாகினி தொலைக்காட்சி வழங்கிய நாடகங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியவர்.

திரைப்படங்கள்

தெய்வம் தந்த வீடு , பொன்மணி போன்ற சில இலங்கைத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

எழுத்துத்துறை

தனது இளமைக்காலத்திலேயே "கோமதியின் கணவன்" என்ற நாவலை எழுதி வெளியிட்ட இவர் இலங்கையில் "இருக்கிறம்" சஞ்சிகையில் கட்டுரைத்தொடரை எழுதிவந்தார். தற்போது கனடாவில் "தாய்வீடு" பத்திரிகையில் "இப்படியும் மனிதர்கள்" என்ற தொடரை எழுதி வருகிறார்.

"https://tamilar.wiki/index.php?title=சோக்கல்லோ_சண்முகநாதன்&oldid=2686" இருந்து மீள்விக்கப்பட்டது