சொ. சேதுபதி
சேதுபதி ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள வள்ளல்பாரி ஆண்ட பறம்புமலைச்சாரலில் உள்ள கிருங்காக்கோட்டைக் கிராமத்தைச் சார்ந்தவர். தம் ஊர்ப்பெயர் சுருக்கி, ‘கிருங்கை’ எனக்கொண்டு, ‘கிருங்கை சேதுபதி’ ஆனவர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வள்ளல்பாரி உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பையும், பாரம்பரிய மிக்க, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்க்கல்வியும் பெற்றவர். முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்ற இவர் கல்வியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்றவர். புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.
இலக்கிய வாழ்வு
பல்துறை சார்ந்த நூல்கள் படைத்துவரும் கவிஞர்; சிறுகதையாளர்; நாடக ஆசிரியர்; ஆய்வாளர்; சொற்பொழிவாளர்; பட்டிமண்டபம் ஏறுபவர். 1990களில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘தொடரும்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். உலகத்திருக்குறள் பேரவையின் மாநில இளைஞர் அணித்தலைவர்.
படைப்புகள்
ஆய்வு நூல்கள்
- பாரதியாரின் விநாயகர் வழிபாடு (2003)
- சுற்றுப்புறச்சூழல் கல்வியும் நமது கடமைகளும் (2004)
- சொற்பொழிவாளர் பாரதியார் (2007)
- அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் (2007) இணையாசிரியர் (இரா.மீனாட்சி- சேதுபதி)
- தமிழில் மகாகவி தோன்றுக (2008)
- வரலாறு நடந்த வழியில்... (2009)
- திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள் (2009)
- கம்பன் காக்கும் உலகு (2011)
- உலகப் பொதுக்கவிதை (2012)
- பாரதிதேடலில் சில புதிய பரிமாணங்கள் (2012)
கட்டுரை நூல்கள்
- ஆதலினால் அன்பு செய்வீர் (2004)
- வாழ்க்கைக் கணக்கு (2006)
- கல்வியும் குழந்தைகளும் (2007)
- நிகழ்வுகள் நினைவுகள் பதிவுகள் (2010)
- தமிழ் இலக்கியவரலாறு (இணையாசிரியர்) (2010) (முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து எழுதிய நூல்)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- பைந்தமிழ்க்காவலர் பழ. முத்தப்பனார் (2006)
- அற்புதத்துறவி அடிகளார் (2008)
- இந்திய இலக்கியச் சிற்பி - குன்றக்குடி அடிகளார் (2011)
கவிதை நூல்கள்
- கனவுப்பிரதேசங்களில்... (1997)
- குடைமறந்த நாளின் மழை (1999)
- வனந்தேடி அலையும் சிறுமி (2002)
- சீதாயணம் (2005)
- சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் (2006)
- உயிர் மெய் (2011)
- பொழுதுகளை வேட்டையாடுகிறவன் (2012)
நாடக நூல்கள்
- என்றும் இருப்பேன்...(பாரதியார்வாழ்வியல்) (2002)
- வைகையில் வெள்ளம் வரும் (குறு நாடகங்கள்) (2007)
- அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... (வரலாற்றுக் குறு நாடகங்கள்) (2012)
சிறுவர் இலக்கிய நூல்கள்
- பூந்தடம் (சிறுவர் பாடல்கள்) (2000)
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்... (கதைகள்) (2001)
- சிரிக்கும் பனைமரம் (சிறுவர் பாடல்கள்) (2009)
- ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை (பாரதியார் கதைகள்) (2012 )
சிறுகதைத் தொகுப்பு நூல்
- பாரிவேட்டை (2005)
தொகுப்பு நூல்கள்
- மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள் (மு.ப) (2001); இரண்டாம் பதிப்பு (2006)
- வாழ்வியல் நோக்கில் சமயமும் சமுதாயமும் (பதின்மரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) (2006)
- மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (இணையாசிரியர்) (2006)
- உள்ளுக்குள் ஒரு நதி (மண்ணியச் சிறுகதைகள்) (பன்னிருவர் கதைகள்) (2007)]
- சிற்பி கவிதைகள் - இருபெருந்தொகுதிகள் (2011)
- சிற்பி: துளிகளில் ஒளிரும் வெளிகள் (A READER: SELECTED WRITINGS OF SIRPI) (2011)
- திரு.வி.க.வின் என் கடன் பணி செய்து கிடப்பதே (2012)
- நதிக்கரைச் சிற்பங்கள் - சிற்பி (2012)
- சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள் (2012)
பரிசுகள்
- திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கப் பொற்கிழிப்பரிசுகள்
- குழந்தை எழுத்தாளர் சங்கம்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
- தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்
- சென்னைக்கம்பன் கழகம்
- சேலம் தாரைப்புள்ளிக்காரர் மற்றும் எழுத்துக்களம்
உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றவர்.[சான்று தேவை]
விருதுகள்
- 2000ஆம் ஆண்டில் தமிழகஅரசின் குறள்பீடப் பாராட்டிதழும், பொற்கிழிப்பரிசும்[சான்று தேவை]
- 2002இல் பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த புதுக்கவிதைத்தொகுப்புக்கான முதற்பரிசு ‘குடைமறந்த நாளின் மழை’ என்னும் கவிதைத் தொகுப்பு.[சான்று தேவை]
- 2007ஆம் ஆண்டு முதன்முதலாக, இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை வழங்கிய ‘இசை ஞானி இளையராஜா வளரும் எழுத்தாளருக்கான விருது[சான்று தேவை]
- 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது (சிறகு முளைத்த யானை)https://www.maalaimalar.com/news/national/2018/06/22194228/1172044/Sahitya-Akademi-announces-winners-for-Bal-Sahitya.vpf