சொ. சிட்டிபாபு

மேயர் சிட்டிபாபு என்று அழைக்கப்படும் சொக்கலிங்க சிட்டிபாபு என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு நாடாளுமன்றளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1958 இல் சென்னை மாநகராட்சிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1965 இல் சென்னை மேயராக இருந்தார்..[3].இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக முதன் முதலாக 1958ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மேயராக 1965 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திராகாந்தியால் அறிவிக்கப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது. இவர் மற்ற திராவிட முன்னேற்ற கழக தலைவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உண்டாக்கபட்ட காயங்களால் சிட்டிபாபு இறந்தனர் சென்னை மத்திய சிறைச்சாலையில் மு. க. ஸ்டாலினை காப்பாற்ற முயன்ற பொழுது காவல் துறையின் சித்தரவதைக்கு ஆளாக்கபட்டு அதன் காயங்களால் இறந்தார்[4][5][6][7][8][9] .

மேயர் சிட்டிபாபு
29வது சென்னை மாநகராட்சி மேயர்
பதவியில்
1965-1966
முன்னவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் இரா. சம்பந்தம்
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)
பதவியில்
1967-76
முன்னவர் ஓ. வி. அழகேசன்
பின்வந்தவர் ஆர். மோகனரங்கம்
தொகுதி செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு (1935-10-19)19 அக்டோபர் 1935
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும், சென்னை மாகாணம், திண்டிவனம்,
இறப்பு 4 சனவரி 1977(1977-01-04) (அகவை 41)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு
(now சென்னை)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) கங்காபாய், இராஜலட்சுமி
பிள்ளைகள் சேகர், சுகுமார், விஸ்வேஸ்வரன், மாலதி

1975 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் அதன் ஜனநாயகத்திற்கும் ஒரு கடினமான காலம். அந்த ஆண்டு, அப்போதைய இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையை அறிவித்து, குடிமை உரிமைகளை நசுக்கி, அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு தலைவராக மு. க. ஸ்டாலின் அப்போது தான் அரசியலில் அடியெடுத்து வைக்க ஆரம்பிது இருந்தார். இந்த அளவுக்கு நிலமை மோசமாகும் என்று மு. க. ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சொ. சிட்டிபாபு மு. க. ஸ்டாலினுடன் இருக்க முடிவு செய்தார். இருவரும் சிறைக்கு சென்றனர். கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிறிது காலம் கழித்து ஸ்டாலின் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: இந்த இயக்கத்தில் தெரிந்த சில முகங்களை சந்தித்தது அவர்களுடன் நெருக்கமாக வசதியாக இருந்தது. அப்போது சிட்டிபாபு, ஆர்க்காடு வீராசாமி, நீல நாராயணன், கோவிந்தராசன் போன்றவர்கள் சூழ்ந்திருப்பது நிச்சயமற்ற பயத்தை அகற்ற உதவியாக இருந்தது என்றார்.

நெரிசலான சிற்றறைகள், சுகாதாரமற்ற தரைகள், சிறுநீர் கழிக்கபட்ட சுவர்கள் போன்றவை கொண்டதாக சிறை இருந்தது. மேலும் காலை உணவுக்கு மிளகாயுடன் அதிக உப்புபோடப்பட்ட கஞ்சி வலிமையான மனிதனையும் தளர்சியடைய போதுமானதாக இருந்தது. தினமும், சிட்டிபாபுவின் குடும்பத்தினர் வந்து பார்க்க முயற்சிப்பார்கள். அவரும் கடிதங்களை அனுப்ப கடினமாக முயற்சி செய்வார்.

மு. க. ஸ்டாலின் ஒரு நாள் இரவு தனிமைப்படுத்தப்பட்டு, சிறை கண்காணிப்பாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டார். இதைக் கூற அவர் உயிர் தப்பிப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் தாக்கபட்டபோது சிட்டிபாபு குறுக்கேவந்து அந்த அடிகளை தாங்கிக்கொண்டார். ஆனால் அவை ஆபத்தானவையாக முடிந்தது.

அடுத்த இரண்டு நாட்களில், சிட்டிபாபுவின் உடல்நிலை மோசமடைந்தது. இவர் விரைவில் இறந்தார். 46 வயதில் இவர் செய்த தியாகத்தின் விளைவாக, இவர் "தியாக மறவன்" என்று அழைக்கப்பட்டார், அது ஒருபோதும் மறக்க முடியாத தியாகமானது. மேயர் சிட்டிபாபு ஒரு தீவிர வாசகர் மற்றும் பெரியார், பேரறிஞர் அண்ணாதுரை ஆகியோரின் சொற்பொழிவினால் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆர்வம் கொண்டார்.

இவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அனைவராலும் நன்கு மதிக்கப்பட்டார். இவரது மரணம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது இறுதிச் சடங்கில் தமிழகம் முழுவதிலுமிருந்து பலர் சென்னை வந்து மரியாதை செலுத்தினர்.

சிட்டிபாபு மு. க. ஸ்டாலினுடன் இணைந்து இணைந்து "நம்பிக்கை நட்சத்திரம்" என்ற படத்தை தயாரித்தார். அப்படத்தில் மு. கருணாநிட்லியின் மகன் மு. க. முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பல நாடகங்களிலும் நடித்ததுடன், பேச்சாளாக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. Volume I, 1967 Indian general election, 4th Lok Sabha
  2. Volume I, 1971 Indian general election, 5th Lok Sabha
  3. "Members Bioprofile Chitti Babu". மக்களவை (இந்தியா) இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160629141657/http://164.100.47.192/loksabha/writereaddata/biodata_1_12/1744.htm. பார்த்த நாள்: 27 May 2016. 
  4. "What makes MK Stalin the political successor of Karunanidhi". தி எகனாமிக் டைம்ஸ். 6 June 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-01-06/news/36162200_1_m-karunanidhi-alagiri-kanimozhi. பார்த்த நாள்: 27 May 2016. 
  5. "The end of a prison’s days". PC Vinoj Kumar (Tehelka). 7 March 2009 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160625082428/http://www.tehelka.com/2009/03/the-end-of-a-prisons-days/. பார்த்த நாள்: 27 May 2016. 
  6. Vijaya Ramaswamy (22 May 2007). Historical Dictionary of the Tamils. Scarecrow Press. பக். 61–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-6445-0. https://books.google.com/books?id=H4q0DHGMcjEC&pg=PA61. 
  7. "MISA detention taught me a tough lesson, says Stalin". The Hindu. 1 February 2016. http://www.thehindu.com/news/cities/chennai/misa-detention-taught-me-a-tough-lesson-says-stalin/article8177100.ece. பார்த்த நாள்: 27 May 2016. 
  8. India. Parliament. Rajya Sabha (1978). Parliamentary Debates: Official Report. Rajya Sabha. Council of States Secretariat. பக். 275. https://books.google.com/books?id=RGDVAAAAMAAJ. பார்த்த நாள்: 27 May 2016. 
  9. Ananth V. Krishna (1 September 2011). India Since Independence: Making Sense Of Indian Politics. Pearson Education India. பக். 162–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-3465-0. https://books.google.com/books?id=8v7Vr2iQUHkC&pg=PA162. பார்த்த நாள்: 27 May 2016. 

வெளி இணைப்புகள்

முன்னர்
எஸ். கிருஷ்ணமூர்த்தி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1964-1965
பின்னர்
எம். மைனர் மோசஸ்
"https://tamilar.wiki/index.php?title=சொ._சிட்டிபாபு&oldid=27432" இருந்து மீள்விக்கப்பட்டது