சே. மாணிக்கம்

சே. மாணிக்கம் (பிறப்பு: சூலை 2, 1946) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் எனும் ஊரில் வசித்து வரும் இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், புலவர் பட்டமும் பெற்று தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 10 நூல்களையும், 3 கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறை சார்பில் உடல் ஊனமுற்றோருக்கான சிறந்த பணியாளர் விருது பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "பழைய கதைகளில் புதிய பார்வை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=சே._மாணிக்கம்&oldid=4278" இருந்து மீள்விக்கப்பட்டது