சேவூர் வாலீசுவரர் கோயில்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) சேவூர் வாலீஸ்வரர் சுவாமி மற்றும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
சேவூர் வாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.[2]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக வாலீவரர் உள்ளார். வாலி வழிபட்டதால் மூலவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இறைவி அறம்வளர்த்த நாயகி ஆவார். கோயிலில் தல தீர்த்தமாக தெப்பம் உள்ளது. சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிசேகம், கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[2]
அமைப்பு
ஐந்து நிலையுடன் கூடிய ராஜ கோபுரம் உள்ளது. இத்தலத்து விநாயகர் அனுக்கை விநாயகர் ஆவார். மூலவருக்கு இடது புறம் இறைவி தனி சன்னதியில் உள்ளார். இறைவியின் சன்னதிக்குப் பின் புறம் பால தண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் உள்ளார். திருச்சுற்றில் பஞ்ச லிங்கம், சகஸ்ர லிங்கம், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரர் தனி சன்னதியில் உள்ளார். நவக்கிரக மண்டபமும் இக்கோயிலில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் வாலி சிவனுக்கு பூசை செய்வது போன்ற சிற்பம் காணப்படுகிறது. அரச மரத்தடியில் விநாயகர் உள்ளார். அருகில் லிங்க பாணம் உள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ 2.0 2.1 2.2 அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்