சேவல் (சீன சோதிடம்)
சேவல் சீன சோதிடத்தின் பத்தாவது குறி ஆகும். 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017, 2029, 2041 ஆகிய வருடங்கள் சேவல் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் கண்ணியம், நம்பிக்கை மற்றும் கூர்ந்த அறிவு ஆகிய குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரனம்
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை ஆகியவை முதல் ஏழு இடங்களில் வந்தன. இவற்றிக்கு பிறகு ஆடு, குரங்கு, சேவல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டு அடுத்ததாக வந்தன. இதில் சேவல் ஒரு மரப்பலகையை கண்டுபிடித்து அதில் மற்ற மூன்று விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வந்தது. இந்தப் பலகை ஆற்றின் இடையில் இருந்த புதர்களில் சிக்கிக்கொண்ட போதெல்லாம் குரங்கு மற்றும் ஆடு ஆகிய இரண்டும் அவற்றை விலக்கிவிட்ட படியே வந்தன. இவ்வாரு ஒற்றுமையுடன் ஒன்றாக வந்த இந்த விலங்குகலை வாழ்த்திய கடவுள் ஆட்டை எட்டாவது வருடக்குறியாகவும், குரங்கு மற்றும் சேவலை முறையே ஒன்பதாவது பத்தாவது வருடக்குறியாகவும் தெரிவு செய்தார்.
சேவல் பத்தாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள்
நேரம் | மாலை 5:00 முதல் 7:00 வரை |
உரிய திசை | மேற்கு |
உரிய காலங்கள் | இலையுதிர் காலம் (செப்டம்பர்) |
நிலையான மூலகம் | உலோகம் |
யின்-யான் | யின் |
ஒத்துப்போகும் விலங்குகள் | டிராகன், எருது, பாம்பு |
ஒத்துப்போகாத விலங்குகள் | முயல், நாய் |
இராசி அம்சங்கள்
இராசி எண்கள் | 1, 5, 6, 12, 15, 16, 24, 51 |
இராசி நிறம் | வெள்ளை, வயலட் |
இராசிக் கல் | சிட்ரைன் |
சேவல் வருடத்தைய பிரபலங்கள்
சேவல் வருடத்தில் உதயமான நாடுகள்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- Chinese Zodiac Rooster Destiny
- Tarot.com profile
- Cock compatibility page பரணிடப்பட்டது 2010-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Chinese Zodiac பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்