சேனையூர்

சேனையூர் இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகருக்கு கிழக்கே சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர்.

வரலாறு

ஈழத்தின் பழமை வாய்ந்த வரலாறு கொண்ட கிராமங்களில் சேனையூரும் முக்கிய இடம் வகிக்கிறது. ஈழத்தில் தனியரசு செலுத்திய சோழ மன்னர்களது சேனைகள் வந்து பாடி வீடுகள் அமைத்து தங்கியிருந்ததால் சேனையூர் எனப் பெயர் பெற்றதாக பரம்பரையான கதைகள் வழியாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலமாகவும் அறிய முடிகிறது. இவ்வூர் மருதடிச்சேனையூர் எனவும் அழைக்கப்பட்டது. கோணேசர் கல்வெட்டு வழமைகளுடன் இவ்வூர் நெருங்கிய தொடர்பு கொண்டது. கோணேச கோயிலுக்கு இங்கிருந்து நெல், தேன், இலுப்பெண்ணெய் ஆகியன மீகாமன் மூலம் திருகோணமலை கோணேசர் குருகுலக் கரூவூலத்தில் பொருட்கள் கையளிக்கப்பட்டதாக கோணேசர் கல்வெட்டு சொல்கிறது. அத்தோடு அடப்பன் முறையின் கடைசி இடமாக சேனையூர் இருந்திருக்கிறது என்பதற்கு சேனையூரின் கடைசி அடப்பனாக இருந்த கதிரவேலி என்பவர் 1980ம் ஆண்டுவரை உயிருடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மெதடிஸ்த மிசனரிமார் 1838ல் சேனையூரில் சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலையை நிறுவினர்.

ஆலயங்கள்

  • ஸ்ரீ சேனையூர் நாகம்மாள் ஆலயம்
  • சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலயம்
  • வீரபத்திரர் ஆலயம்
  • மாரியம்மன் ஆலயம்
  • புவனேஸ்வரி ஆலயம்
  • ஊற்றடிப் பிள்ளையார் ஆலயம்
  • வராகி அம்மன் ஆலயம்

பாடசாலைகள்

இணைப்புகள் http://eezanaddiyam.blogspot.co.uk www.sugubala.co.uk

"https://tamilar.wiki/index.php?title=சேனையூர்&oldid=39271" இருந்து மீள்விக்கப்பட்டது