செ. ரத்தினக்குமார்

செ. ரத்தினக்குமார் (பிறப்பு: டிசம்பர் 10. 1954) ஈழத்து நாட்டுக்கூத்துக்கலைஞர். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்ததுடன், கூத்துக்கள் பழக்கி அரங்கேற்றிய அண்ணாவியராக இருந்தார். அக்காலகட்டத்தின் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார்.

செ. ரத்தினக்குமார்
செ. ரத்தினக்குமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
செ. ரத்தினக்குமார்
பிறந்ததிகதி டிசம்பர் 10. 1954


வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, வண்ணான்கேணி பாளையில் செல்லையா, ராசாமணி இணையருக்கு மகனாக டிசம்பர் 10. 1954 அன்று ரத்தினக்குமார் மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை பாளை மத்தியக்கல்லூரியில் ஆரம்பித்தார். சங்கீதபூஷணம் அ.கி. ஏரம்பமூர்த்தியிடம் சங்கீதம் கற்றார். பாடசாலை நாடகங்களில் பங்கு பெற்றார். தந்தை செல்லையா ஹார்மோனிக் கலைஞர், நாடகம் கற்பிக்கும் அண்ணாவியாராக இருந்தார். சிறுவயதிலிருந்தே ரத்தினக்குமார் நாடகக் கலையில் ஈடுபட்டார்.

கலை வாழ்க்கை

10 வயதில் நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக பதினொரு மேடைகளில் நடித்தார்.அவருடைய நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த மகனாக நடித்தார். வி.என். செல்வராசா அவர்களுடன் சந்திரமதியாக, சாவித்திரியாக நடித்தார். சமூக நாடகங்கள் பலவற்றில் நடித்தார்.

இணைந்து நடித்தவர்கள்

  • கே.வி. நற்குணம்
  • வி. செல்வரத்தினம்
  • எம். தைரியதாதன்
  • வி.ரி. செல்வராசர
  • கே. கனகரத்தினம்
  • சிவலிங்கம்
  • சின்னமணி
  • கே. பரராசசிங்கம்
  • இணணதாசன் சர்மா
  • மாஸ்ரர் சரவணமுத்து
  • தேவி முருகானந்தம்

விருதுகள்

  • பாரம்பரியக்கழகம் நடத்திய இசை நாடகப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.

நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்

  • அரிச்சந்திரா - அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்
  • சத்தியவான் சாவித்திரி - சத்தியவான், சாவித்திரி, மல்லிகா
  • நல்லதங்காள் - நல்லண்ணன், மூத்த மகன்
  • ஞானசௌந்தரி - புலேந்திரன்
  • பூதத்தம்பி - பூதத்தம்பி
  • கோவலன் - கோவலன்

பழக்கிய நாடகங்கள்

  • அரிச்சந்திரா
  • சத்தியவான் சாவித்திரி
  • ஞானசௌந்தரி
  • நந்தனார்
  • நல்லதங்காள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=செ._ரத்தினக்குமார்&oldid=9659" இருந்து மீள்விக்கப்பட்டது