செ. சீ. பத்ரிநாத்

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் (S. S. Badrinath)(பிப்ரவரி 24, 1940 - நவம்பர் 21, 2023) என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.[1] இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.[2] இவர் 1996-ல் இந்தியக் குடியரசில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார். பத்மசிறீ மற்றும் மரு. பி. சி. ராய் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றார்.

செ. சீ. பத்ரிநாத்
S. S. Badrinath
பிறப்பு24 பெப்ரவரி 1940 (1940-02-24) (அகவை 84)
சென்னை, இந்தியா
இறப்பு21 நவம்பர் 2023(2023-11-21) (அகவை 83)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
துறைகண் மருத்துவம்,கண் அறுவைச்சிகிச்சை
கல்விஇளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல், எம். டி., எப். ஆர். சி. எசு.,
துணைவர்வசந்தி
இணையதளம்
www.sankaranethralaya.org

ஆரம்ப கால வாழ்க்கை

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவரது தந்தை செ. வி. சீனிவாச ராவ், பொறியாளர் ஆவார். சென்னை அரசுப் பணியில் பணியாற்றியவர். இவரது தாயார் லட்சுமி தேவி, தமிழகத்தின் நெரூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரின் மகள். பதின்ம வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு கிடைத்த காப்பீட்டுத் தொகையில் மருத்துவப் படிப்பை முடித்தார். சிறுவயது நோய் காரணமாக 7 வயதில் தனது கல்வியைத் தாமதமாகத் தொடங்கிய பத்ரிநாத், மயிலாப்பூரில் உள்ள பி. எசு. உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை சிறீ இராமகிருஷ்ணா மடம் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் 1955 மற்றும் 1957க்கு இடையில் லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.[3][4]

மருத்துவ வாழ்க்கை

பத்ரிநாத் 1963-ல் மதராசு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது உள்ளக பயிற்சி மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியலைப் படித்ததைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் படிப்பினைத் தொடர்ந்தார், மேலும் பாஸ்டன், மாசசூசெட்ஸ், மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனையின் விழித்திரை சேவையில் சார்லஸ் ஸ்கெபன்ஸுடன் இணைந்து ஆய்வு நிதி பெற்றார். இவர் 1969-ல் கனடாவின் அரச அறுவையிலாளர் கல்லூரியின் சகாவாகவும், 1970-ல் அமெரிக்கக் கண் மருத்துவ வாரியத்தின் பிரிவுத் தலைவராகவும் ஆனார். இவர் 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பினார். 1970 முதல், ஆறு ஆண்டுகள், சென்னை தன்னார்வ சுகாதார சேவைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார். இவர் எச். எம். மருத்துவமனை (1970 முதல் 1972 வரை) மற்றும் சென்னை விஜயா மருத்துவமனை (1973 முதல் 1978 வரை) ஆகியவற்றில் கண் மருத்துவம் மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சையில் தனியாகப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் 60க்கும் மேற்பட்ட சக மதிப்பாய்வு கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

சங்கர நேத்ராலயா

1978ஆம் ஆண்டில், பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும்.[9]

சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.[10] சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது.[11]

இறப்பு

பத்ரிநாத் 21 நவம்பர் 2023 அன்று தனது 83வது வயதில் சென்னையில் காலமானார்.[12] [4]

மேற்கோள்கள்

  1. "Sankara Nethralaya. A Mission For Vision » 'Best Eye Hospital' in India". 9 November 2009. http://omlog.org/2009/11/%E2%80%98best-eye-hospital%E2%80%99-in-india.html. 
  2. 2.0 2.1 "List of Fellows - NAMS". National Academy of Medical Sciences. 2016. http://www.nams-india.in/downloads/fellowsmembers/ZZ.pdf. 
  3. "Know Our Luminaries". 3 June 1967. http://www.squintmaster.com/Drbadrinathan.htm. 
  4. 4.0 4.1 "Dr Badrinath, founder of Chennai's Sankara Nethralaya, no more". Pushpa Narayan (The Times of India). 21 November 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/dr-badrinath-a-visionary-no-more/articleshow/105376803.cms. பார்த்த நாள்: 22 November 2023. 
  5. 5.0 5.1 5.2 "Chennai's trinity of eye specialists honoured". https://www.newindianexpress.com/cities/chennai/2009/nov/30/chennais-trinity-of-eye-specialists-honoured-108550.html. 
  6. "List of Fellows". National Academy of Medical Science (India). p. 8. https://www.nams-india.in/downloads/fellowsmembers/ZZ.pdf. 
  7. "Award for Shankar Netralaya founder". https://www.newindianexpress.com/cities/hyderabad/2009/jul/05/award-for-shankar-netralaya-founder-65276.html. 
  8. "Life Time Achievement Award – Vitreo Retina Society" (in en-US). https://vrsi.in/life-time-achievement-award/. 
  9. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 6 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100706190312/http://www.eso.sankaranethralaya.org/pdf/Dr.SSB.pdf. 
  10. "Sankara Nethralaya". Sankara Nethralaya. http://www.sankaranethralaya.org/home-details.html. 
  11. "Education". http://www.sankaranethralaya.org/education.html. 
  12. S.S. Badrinath, founder of Chennai’s Sankara Nethralaya passes away
"https://tamilar.wiki/index.php?title=செ._சீ._பத்ரிநாத்&oldid=28216" இருந்து மீள்விக்கப்பட்டது