செழியன் காசுகள்

செழியன் காசுகள் என்பது தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டறியப்பட்ட பாண்டியர் காலத்து நாணயங்களாகும்.

செழியன் காசு

இரண்டு காசுகள்

  1. 0.900 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
  2. 6.7 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 1.9 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேந்தனின் தலை, தலைக்கவசம் அணிந்துள்ளார், கவசத்தின் பின்புறம் அலங்கார அணிகலன்கள், கூர்மையான நாசி, நீண்ட மீசை போன்றவை காசில் தெரிகின்றன. 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில் தலை அருகில் 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. பின்புறத்தில் யானை, நீண்ட சதுரத் தொட்டி, அதில் இரண்டு மீன்கள், சுவாசுதிக்காச் சின்னம் போன்றவை உள்ளன. [1]

காலம்

இக்காசுகளில் காணப்படும் செழியன் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் செழியன் என்ற இரு சொற்களும் ஒரே கால தமிழ் பிராமி போல் தெரிவதால் இவற்றின் காலத்தை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.

செழிய, செழியன் நாணயங்கள்

செழிய, செழியன் நாணயங்கள் குறித்து டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி 'செழிய, செழியன் நாணயங்கள்' எனும் நூலை எழுதி 2014 ஆகஸ்டு 27 இல் வெளியிட்டுள்ளார்.[2]

மூலம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செழியன்_காசுகள்&oldid=42479" இருந்து மீள்விக்கப்பட்டது