செல்வா கனகநாயகம்

பேராசிரியர்
செல்வா
கனகநாயகம்
ChelvaKanaganayakam.jpg
முழுப்பெயர் செல்வா
கனகநாயகம்
மறைவு 23-11-2014
டொரன்டோ,
கனடா
தேசியம் கனேடியர்
அறியப்படுவது எழுத்தாளர்
ஆங்கிலப்
பேராசிரியர்
கல்வி கலாநிதி
(பிரிட்டீஷ்
கொலம்பியா
பல்கலைக்கழகம்)
இளங்கலை
(பேராதனைப்
பல்கலைக்கழகம்
பணி பேராசிரியர்
பணியகம் ரொறன்ரோ
பல்கலைக்கழகம்
பெற்றோர் செல்வநாயகம்


பேராசிரியர் செல்வா கனகநாயகம் (Chelva Kanaganayakam, இறப்பு: நவம்பர் 23, 2014) ஈழத்தமிழ்க் கல்விமானும், எழுத்தாளரும் ஆவார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த இவர் ரொறன்ரோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். கனடா ரோயல் கழகத்தின் ஆய்வாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

பேராசிரியரும், தமிழறிஞருமான பேராசிரியர் செல்வநாயகம் அவர்களின் மகனான கனகநாயகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார். குடியேற்றகாலத்தின் பின்னரான இலக்கியம் குறித்து இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன.[2] தற்கால இந்திய இலக்கியம், மற்றும் தென்கிழக்காசிய எழுத்துகள் குறித்தும் இவர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழியல் மாநாடுகளை ஆண்டு தோறும் நடத்தி வந்தார். டொரண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கற்கைகளுக்கான மையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.[2] பல ஆங்கில இலக்கிய ஆக்கங்களை வெளியிட்டுள்ள இவர் புதுவை இரத்தினதுரை, வ. ஐ. ச. ஜெயபாலன், சேரன் போன்ற ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வெளியிட்ட நூல்கள்

  • A Trick With a Glass: Michael Ondaatje's South Asian Connection (1992)
  • Structures of Negation: The Writings of Zulfikar Ghose (1993)
  • In Our Translated World: Contemporary Global Tamil Poetry (2013)
  • Counterrealism and Indo-Anglian Fiction (2002)
  • Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka (தொகுப்பு, 2001)
  • Dark Antonyms and Paradise: The Poetry of Rienzi Crusz (1997)
  • Configurations of Exile: South Asian Writers and Their World (1995)
  • Structures of Negation: The Writings of Zulfikar Ghose (1993)
  • World Without Walls: Being Human, Being Tamil (சேரனுடன் இணைந்து, 2011)
  • Moveable Margins: The Shifting Spaces of Canadian Literature (2005)
  • Wilting Laughter: Three Tamil Poets (வ. ஐ. ச. ஜெயபாலனுடன், 2009)

மறைவு

பேராசிரியர் செல்வா கனகநாயகம் 2014 நவம்பர் 23 அன்று டொரண்டோ ரோயல் கழகத்தின் விருது வழங்கும் வைபவத்தில் கலந்து விட்டுத் திரும்பும் வழியில் திடீர் மாரடைப்பினால் காலமானார். இவருக்கு வயது 62 ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. தமிழ் இலக்கியத் தோட்டம்
  2. 2.0 2.1 2.2 "Professor Chelva Kanaganayakam passes away". தமிழ்நெட். 23 நவம்பர் 2014. http://tamilnet.com/art.html?catid=13&artid=37499. பார்த்த நாள்: 24 நவம்பர் 2014. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்வா_கனகநாயகம்&oldid=2664" இருந்து மீள்விக்கப்பட்டது