செருக்கள வஞ்சி
செருக்கள வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
செருகளம் என்பது போர்க்களம்.
போரில் மாண்டவர்களின் உடல்களையும், மாண்ட குதிரை, யானை ஆகியவற்றின் உடல்களையும் காக்கை, கழுகு, நாய், நரி, பேய் பிடுங்கித் தின்பதாகப் பாடுவது செருக்கள வஞ்சி. [1]
கூளிப்பேய், கழுகு, சம்பநாய், காகம் முதலானவை எமது எமது என எக்களித்து இருக்கையில், பூதம் இசை பாடி ஆடுவதாகப் பாடுவது செருக்கள வஞ்சி. [2]
இவை ஆசிரியப்பாவாலும் வஞ்சிப்பாவாலும் பாடப்படும். [3]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த தீபம் நூற்பா 45
- ↑ பிரபந்த தீபம் நூற்பா 17
- ↑ பிரபந்த மரபியல் நூற்பா 39