செம்பாக்கம்
செம்பாக்கம் (ஆங்கிலம்:Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
செம்பாக்கம் | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | செங்கல்பட்டு | ||||
வட்டம் | தாம்பரம் | ||||
அருகாமை நகரம் | தாம்பரம் மற்றும் சென்னை | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
45,356 (2011[update]) • 7,257/km2 (18,796/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi) | ||||
குறியீடுகள்
|
அமைவிடம்
செம்பாக்கம் பகுதி, காஞ்சிபுரத்திலிருந்து 60 கிமீ; தாம்பரத்திலிருந்து 5 கிமீ; சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.
அரசியல்
செம்பாக்கம் பகுதி, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 11,668 வீடுகளும், 45,356 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
வரலாறு
தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், 2013-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5] செம்பாக்கம் நகராட்சியில் செம்பாக்கம், இராஜகீழ்பாக்கம் மற்றும் கௌரிவாக்கம் பகுதிகள் கொண்டது.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று செம்பாக்கம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ Sembakkam Town
- ↑ Sembakkam Population Census 2011
- ↑ Sembakkam is now municipality