செந்துறை வட்டம்

செந்துறை வட்டம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக செந்துறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவைகள் ஆழத்தியூர், ஆனந்தவாடி, ஆசாவீரன்குடிக்காடு, ஆதனக்குறிச்சி, அயன்தத்தனூர், இரும்புலிக்குறிச்சி, குளிமாளிகை, கிளிமங்கலம், குளுமூர், முனக்கடயான், மனப்பத்தூர், சித்துடையார்,மருவத்தூர், நாகல்குழி, நக்கம்பாடி, நமங்குலம், புராணம், பெரியாக்குறிச்சி, பிலாக்குறிச்சி, பொன்பரப்பி, சன்னாசிநல்லூர், செந்துறை, கிரகடம்பூர், சிறுகளத்தூர், தளவாய் வடக்கு, தளவாய் தெற்கு, துளார், உச்சினி, வஞ்சினாபுரம் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,11,891 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 32,887 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 1,344 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 68.14% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2011-08-24.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-24.
  3. Sendurai Taluka Population, Caste, Religion Data
"https://tamilar.wiki/index.php?title=செந்துறை_வட்டம்&oldid=125948" இருந்து மீள்விக்கப்பட்டது