செங்கொடுவேரி
செங்கொடுவேரி | |
---|---|
Plumbago indica | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Plumbaginaceae |
பேரினம்: | Plumbago |
இனம்: | P. indica |
இருசொற் பெயரீடு | |
Plumbago indica L. |
செங்கொடுவேரி (Plumbago indica) என்னும் சொல் செந்நிறக் கிளைகளையும், செங்குத்துக் கிளைகளையும் குறிக்கும்.
- சங்ககால விளையாட்டு
- சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்படும் 99 மலர்களில் செங்கோடு என்பதும் ஒன்று. [1]
- செங்கோட்டு மலரின் பயன்பாடு
- யாழைச் சித்திர வேலைப்பாடு அமைந்த துணிப்பையில் வைத்திருந்தனர். அத்துடன் அதற்குச் செங்கோடு என்னும் மலரையும் சாத்தியிருந்தனர்.[2]
- செங்கோட்டு மலர்
- நொச்சி செங்குத்து வலார்களைக் கொண்டு செங்கோடாக வளரும். இதன் பூவே செங்கோட்டு மலர். இக்காலத்தில் கொசுக்கள் அண்டாமல் இருக்க நொச்சி இலைகளை அருகில் போட்டுக்கொண்டு உறங்குவர். அக்காலத்தில் யாழ்ப்பையை அந்துப் பூச்சிகள் அண்டாமல் இருக்க இந்தச் செங்கோட்டு மலர்கள் சிலவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
- குறிப்பு
- செங்கோடு வேரி
- இந்த இரண்டு மலர்களைச் 'செங்கோடுவேரி' என ஒரே மலராக எடுத்துக்கொள்கின்றனர். அவை ஒருசொல்லாக வரின் 'செங்கோட்டுவேரி' என வருவது தமிழ்நெறி என்பதைச் சான்று காட்டப்பட்டுள்ள சிலப்பதிகார மேற்கோளால் உணர்ந்துகொள்ள வேண்டும்.