சூளைமேடு
சூளைமேடு (ஆங்கிலம்: Choolaimedu) இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும்.[3] இது சென்னையில் அமைந்துள்ள ஒரு முதன்மையான குடியிருப்பு மற்றும் வணிக சுற்றுப் பகுதி ஆகும். இதன் எல்லைகளாக கோடம்பாக்கம், வடபழநி, அமைந்தக்கரை, மகாலிங்கபுரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகியவை உள்ளன. ஒரு காலத்தில், புலியூர் கிராமத்தின் பகுதியாக இருந்த இது, இன்று வணிக மற்றும் குடியிருப்பு மையமாக வளர்ந்துள்ளது. பச்சையப்பர் காலத்தில், இன்றைய சூளைமேட்டில் செங்கல் சூளைகள் பல இருந்தன. அதனால், இது சூளைமேடு என பெயர் பெற்றது. சென்னையின் இரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளான ஆற்காடு சாலையையும், நெல்சன் மாணிக்கம் சாலையையும் சூளைமேடு இணைக்கிறது. நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம், சூளைமேட்டிற்கு அருகாமையில் உள்ளது. இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பொறியியல் கல்லூரி மற்றும் பனிமலர் பல்தொழில் நுட்பப் பயிலகம் ஆகியன சூளைமேட்டிற்கு அண்மையில் உள்ள கல்வி நிறுவனங்களாகும். இங்கு பல பள்ளிகளும் உள்ளன. ஆத்ரேயபுர சாலையில் சூளைமேடு காவல் நிலையம் உள்ளது. அரசு கிளை நூலகமும், அம்மா உணவகமும், சூளைமேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சங்கராபுரம் 3 வது தெருவில், சூளைமேடு தபால் நிலையம் உள்ளது.
சூளைமேடு | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°03′46″N 80°13′39″E / 13.0628°N 80.2275°ECoordinates: 13°03′46″N 80°13′39″E / 13.0628°N 80.2275°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | Tamil Nadu தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
• ஆளுநர் | [1] |
• முதலமைச்சர் | [2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600094 |
வாகனப் பதிவு | TN 10 |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | அண்ணா நகர் |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
இணையதளம் | www |
சூளைமேடு நெடுஞ்சாலையும், நெல்சன் மாணிக்கம் சாலையும், வணிக வளாகங்களைக் கொண்டிருக்கும் முக்கிய சாலைகளாகும். இரண்டு பெரிய கோவில்கள், மூன்று தேவாலயங்கள் மற்றும் இரண்டு மசூதிகளும் இங்கு உள்ளது.
அமைவிடம்
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சூளைமேடு அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "choolaimedu". http://www.onefivenine.com/india/villages/chennai/chennai/choolaimedu.