சூலமங்கலம் சகோதரிகள்

இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.

சூலமங்கலம் ஜெயலட்சுமி
சூலமங்கலம் சகோதரிகள்.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜெயலட்சுமி
பிற பெயர்கள்சூலமங்கலம் சகோதரிகள்
பிறப்பு(1937-04-24)24 ஏப்ரல் 1937
பிறப்பிடம்சூலமங்கலம், தஞ்சாவூர், இந்தியா
இறப்பு29 சூன் 2017(2017-06-29) (அகவை 80)[1]
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்கருநாடக இசை, பக்திப்பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள்
தொழில்(கள்)இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர்
சூலமங்கலம் ராஜலட்சுமி
இயற்பெயர்ராஜலட்சுமி
பிற பெயர்கள்சூலமங்கலம் சகோதரிகள்
பிறப்பு(1940-11-06)6 நவம்பர் 1940
பிறப்பிடம்சூலமங்கலம், தஞ்சாவூர், இந்தியா
இறப்பு1 மார்ச்சு 1992(1992-03-01) (அகவை 51)
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்கருநாடக இசை, பக்திப்பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள்
தொழில்(கள்)இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர்

இளமைப் பருவம்

இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.

தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [ 1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள்.

1.டைகர் தாத்தாச்சாரி-இயக்கம்:வி.டி.அரசு.

2.தரிசனம்-இயக்கம்:வி.டி.அரசு.

3.மகிழம்பூ- இயக்கம்: வி.டி.அரசு.

4.பிள்ளையார்-இயக்கம்: வி.டி.அரசு.

5.அப்போதே சொன்னேனே கேட்டியா- இயக்கம் : வி.டி.அரசு.

6.பால்குடம்-இயக்கம்: பட்டு.

7.சண்முகப்ரியா-இயக்கம்: கே.கிருஷ்ணமூர்த்தி.

8.பாதபூஜை- இயக்கம்:பீம்சிங்.

‘டைகர் தாத்தாச்சாரி’ மேடை நாடகத்தை திரைப்படமாக்கி இருக்கிறார்கள். ‘கல்யாணம் ஒரு விழா,இல்வாழ்க்கை திருவிழா,என் வீடு ஆலயம்,நீ அங்கே தேவதை’ என்ற பாடலை டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கிறார்கள். எழுபதுகளில் பிரபலமாய் இருந்த பாடல் இன்று கேட்பாரில்லாமல் கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்றாகி விட்டது.

‘ஏழுமலைவாசா வெங்கடேசா,அந்த இதயந்தனில் வாழும் சீனிவாசா’ என்ற பக்தி பரவசமூட்டும் பாடல் இப்போதும் திருப்பதி லட்டாய் இனிக்கிறது.

‘கண்ணாலே பார் கனி’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘கிளப் டான்ஸ்’ பாடல் கிளுகிளுப்பூட்டுகிறது. ‘மை சாயர் தும் நஹி’ என்ற இந்தி பாடலின் காப்பி என்பது கிறுகிறுக்க வைக்கிறது.

தரிசனம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் கவிதையில் இரண்டு சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றது. ‘கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்’- டி.எம்.எஸ்.&பி.சுசிலா.

இது மாலை நேரத்து மயக்கம்,இதை காதல் என்பதில் தயக்கம் - டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி.

தரிசனம் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஆர்.கே.சேகர்.

‘சண்முகப்ரியா’ என்ற திரைப்படத்தில், ‘காலம் வந்ததும் நான் வருவேன் என கருணை காட்டும் வேலய்யா’ என டி.எம்.எஸ் உருகிப்பாடும் பாட்டு மட்டுமே காணொளியில் காணக்கிடைக்கிறது.

பாடல்கள்

இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும்.[2]

பாடல் ஆல்பம்
கந்த சஷ்டி கவசம் கந்த சஷ்டி கவசம் ஆல்பம்
கந்த குரு கவசம் கந்த சஷ்டி கவசம் ஆல்பம்

விருதுகள்

  • முருக கானமிர்தம்
  • குயில் இசை திலகம்
  • இசையரசி
  • நாதக்கனல்
  • கலைமாமணி -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1982-1983.

மறைவு

சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமி 1992 மார்ச் 1 இல் காலமானார். மூத்தவர் சூலமங்கலம் ஜெயலட்சுமி 2017 சூன் 29 அன்று சென்னை, பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 80வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சூலமங்கலம்_சகோதரிகள்&oldid=8898" இருந்து மீள்விக்கப்பட்டது