சூர்ய பார்வை (திரைப்படம்)

சூர்ய பார்வை (surya paarvai) (தெலுங்கில் ஹலோ ப்ரண்ட்), தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அதிரடி திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜெகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் புதுமுக நடிகை பூஜா ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீனிவாஸ் பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். எஸ். ஏ. ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 1999 ஆம் ஆண்டு சனவரி 14 இல் வெளிவந்து பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் 1994 ல் வெளியான லக் பஸ்ஸனின் லேயொன்: த புரபெஸனல்" எனும் திரைப்படத்தை சார்பாக கொண்டது [1][2]. இத்திரைப்படம் தெலுங்கிலும் அதே நகைச்சுவையுடன் தெலுங்கு நடிகர்கள் நடிக்க "ஹலோ ப்ரண்ட்" எனும் பெயரில் வெளிவந்தது.[3]

சூர்ய பார்வை (தமிழ்)
ஹலோ ப்ரண்ட் (தெலுங்கு)
இயக்கம்ஜெகன்
தயாரிப்புஸ்ரீனிவாஸ் பிரசாத்
திரைக்கதைஜெகன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பிரசாத்
படத்தொகுப்புசாய் பிரசாத்
பாபு ராஜ்
கலையகம்மொட்ரி கிரியேஷன்ஸ்
வெளியீடு14 ஜனவரி 1999 (Tamil)
22 ஜனவரி 1999 (Telugu)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

கதைச்சுருக்கம்

விஜய் (அர்ஜூன்) சுந்தரமூர்த்தியின் அடியாள். விஜய் பணம் கொடுத்தால் குழந்தைகள், பெண்களை தவிர யாரை வேண்டுமானாலும் கொல்லக்கூடிய மனிதன். விஜய் தனியாகவே ஓர் தனி அறையில் வசித்து வந்தான். பூஜா (பூஜா) இளம் யுவதி. விடுதியில் தங்கி படித்து வரும் அவள் விடுமுறை நாட்களில் மட்டும் தனது தந்தையின் வீட்டிற்கு வருவது வழமை. பூஜா அவளது துர்நடத்தை உள்ள தந்தை, சுயநலம் மிக்க இரண்டாம் தாயார் ஆகியோருக்கிடையில் பெரும் அவஸ்தையை அநுபவித்தாள். இருப்பினும் அவளுடைய செல்ல தம்பியான தினேஷ் (மகாநதி தினேஷ்) இருப்பது அவளுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது. பூஜா விஜயை தன் நண்பனாக்கிக் கொள்ள முயன்ற போது அதை அவன் நிராகரித்தான். பூஜாவினுடைய தந்தை ஒரு கடத்தல் காரன். ஒரு நாள் காவல் அதிகாரிகள் பூஜாவின் தம்பி உட்பட குடும்பத்தில் எஞ்சிய பூஜா தவிர்ந்த அனைவரையும் கொன்று விடுகின்றனர். அதன்பிறகு பூஜாவிற்கு விஜய் அடைக்கலம் கொடுத்துடன் அவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

  • அர்ஜூன் - விஜய்
  • பூஜா - பூஜா
  • ரகுவரன் - ஜெயந்த்
  • விஜயகுமார் - நாராயணன்
  • ராதா ரவி- சுந்தர மூர்த்தி
  • கவுண்டமணி - ராஜ்பரத் / நாட்டாமை
  • செந்தில் - பிச்சை பெருமாள் / சுந்தரம்
  • சின்னி ஜெயந்த்
  • மஞ்சுளா விஜயகுமார் - லட்சுமி
  • மகாநதி தினேஷ் - தினேஷ்
  • சிந்து - சிந்து
  • பிரசாத் பாபு - பூஜாவின் தந்தை
  • அல்பொன்சா - ஷீலா
  • எஸ். என். லட்சுமி - லட்சுமியின் தாய்
  • ராணி
  • கவிதா ஸ்ரீ
  • மாஸ்டர் மகேந்திரன்- விஜய் (சிறுவயது)
  • ஜெயமணி
  • கே. கே. சௌந்தர்
  • விமல்ராஜ் - ஜோர்ஜ்
  • ஆடுகளம் நரேன் - கண்ணன், ஜெயந்தின் அடியாள்
  • கலைஞானம் (சிறப்பு தோற்றம்)
  • தெலுங்கு மொழியில் [3]
  • சுதாகர்
  • பாபு மோகன்
  • கௌதம் ராஜூ
  • இரோன்லெக் சாஸ்திரி

இசை

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். 1999 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. பழனி பாரதி இத்திரைப்படத்திற்கான பாடல்வரிகளை எழுதியுள்ளார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்