சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள் வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

பெயர்ப் பிரிவு

சூடாமணி நிகண்டுவில் உள்ள பெயர்த் தொகுதிகள்:- தேவப்பெயர், மக்கள் பெயர்,விலங்கின் பெயர்,மரப்பெயர்,இடப் பெயர், பல்பொருட் பெயர்,செயற்கை வடிவப் பெயர், பண்பு பற்றிய பெயர்,செயல் பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர்.

உசாத்துணை

  • சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்-ஆறுமுக நாவலரால் பரிசோதிக்கப்பட்டது- விஸ்வநாதபிள்ளை- வித்தியா நுபாலன யந்திரசாலை பதிப்பு,சென்னை.சித்தார்தி வருடம் கார்த்திகை மாதம்
  • சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

வெளி இணைப்பு

சூடாமணி நிகண்டு

"https://tamilar.wiki/index.php?title=சூடாமணி_நிகண்டு&oldid=14451" இருந்து மீள்விக்கப்பட்டது