சு. வேணுகோபால்


சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் புகைப்படத்திற்கு நன்றி[1]. கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.[2] இவர் எழுதிய “வெண்ணிலை” [3] எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

சு.வேணுகோபால்
சு. வேணுகோபால்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சு.வேணுகோபால்
பிறந்ததிகதி (1967-05-20)மே 20, 1967
தேசியம் இந்தியா
அறியப்படுவது விரிவுரையாளர்,எழுத்தாளர்

சு.வேணுகோபால் 1994-ஆம் ஆண்டு ’நுண்வெளி கிரகணங்கள்' என்ற தன் முதல் நாவலை எழுதி முடித்தார். இந்நாவல் சுஜாதா ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் ’குமுதம் ஏர் இந்தியா’ விருதைப் பெற்றது. அதற்குப் பரிசாக அளிக்கப்பட்ட அமெரிக்கப் பயணமும் முக்கியமான அனுபவமாக அமைந்தது. நடுவராக இருந்து நுண்வெளி கிரகணங்கள் நாவலைத் தேர்வு செய்த கோவை ஞானி பின்னாளில் சு. வேணுகோபாலின் குருவாகவும், நண்பராகவும் ஆனார். கோவை ஞானி வழி எஸ்.என். நாகராஜனிடம் சு. வேணுகோபாலுக்கு நட்பு ஏற்பட்டது.

நுண்வெளி கிரகணங்கள் நாவலை தொடராக புதிய பார்வையில் வெளியீட விரும்பிய பாவை சந்திரனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்னாளில் சு. வேணுகோபாலின் பல குறுநாவல்கள், சிறுகதைகள் பிரசுரமாக பாவை சந்திரன் உதவினார். நுண்வெளி கிரகணங்கள் நாவல் வெளிவர தாமதமாகி 1997-ஆம் ஆண்டு வெளிவந்தது.

சிறுகதைகள்

சு.வேணுகோபால் முதன்மையாக அவருடைய சிறுகதைகளுக்காகவே நினைவுகூரப்படுகிறார். நேரடியாகவே சிறுகதைத் தொகுதியாக வெளிவந்த அவருடைய ’வெண்ணிலை’ தமிழின் சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. யதார்த்தவாத அழகியல் கொண்ட சு.வேணுகோபாலின் கதைகள் வழக்கமான சிறுகதை இலக்கணத்தை மீறி ஒரு கதைக்குள் முழு வாழ்க்கையையும் முன்வைப்பவை. ’கூந்தப்பனை’ என்னும் அவருடைய குறுநாவலும் தமிழின் முதன்மையான படைப்புகளிலொன்றாக மதிப்பிடப்படுகிறது.

தமிழில் பூடகத்தன்மையும், வடிவச்சுருக்கமும் கொண்ட நவீனத்துவச் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு மாற்றாக மிகுபுனைவுக்கதைகள் வெளிவரத்தொடங்கின. அச்சூழலில் விரிவான கதைக்களமும் நேரடித்தன்மையும் கட்டற்ற கதைமொழியும் கொண்ட யதார்த்தவாதக் கதைகள் வழியாக சு.வேணுகோபால் ஓர் உடைவை உருவாக்கினார். 'கட்டற்ற யதார்த்தவாதக் கதைசொல்லல்' என்னும் அழகியல்போக்கு கொண்ட பிற்காலப் படைப்பாளிகள் பலருக்கும் சு.வேணுகோபால் முன்னோடியானவர்.

சு. வேணுகோபால் யதார்த்த தளத்தில் மனித வாழ்க்கையின் நேரடிப் பார்வையை எழுதியவர். சு. வேணுகோபாலின் எழுத்துலகை, "வேணுகோபால் வெறுமே உத்திக்காகவோ, புதுமைக்காகவோ கதை சொல்வதில்லை. மனித மனசெயல்பாட்டின் புரிந்துகொள்ளமுடியாத ஆழமே அவருக்கு எப்போதுமே இலக்காக உள்ளது. மனிதமனத்தின் உச்சங்களைவிட சரிவுகளில்தான் அவரது கவனம் மேலும் குவிகிறது. சமகாலத்து தமிழ் வாழ்வின் பல அவலக் கூறுகளை சதையைப் பிய்த்துப் போடுவதுபோன்ற மூர்க்கத்துடன் தன் கதைகளில் அவர் எடுத்து முன் வைத்திருக்கிறார்” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்

"வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது." என்று பாவண்ணன் மதிப்பிடுகிறார்.

நாவல்கள்

  • நுண்வெளி கிரகணங்கள் (1997, வேர்கள் இலக்கிய அமைப்பு, 2017 தமிழினி)
  • ஆட்டம் (2013, நாவல்)
  • நிலமென்னும் நல்லாள் (2013, நாவல்)
  • வலசை (2017, எழுத்து பிரசுரம், 2019 தமிழினி)

குறுநாவல் தொகுப்ப

  • கூந்தப்பனை (2001, தமிழினி)
  • திசையெல்லாம் நெருஞ்சி (2008, தமிழினி)
  • பால்கனிகள் (2013, தமிழினி)

சிறுகதைத் தொகுப்பு

  • பூமிக்குள் ஓடுகிறது நதி (2000, தமிழினி)
  • களவு போகும் புரவிகள் (2001, தமிழினி)
  • வெண்ணிலை (2006, தமிழினி)
  • தாயுமானவள் (2020, தமிழினி)
  • ஒரு துளி துயரம் (2008, தமிழினி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • உறுமால்கட்டு ( 2018, சிறுவானி வாசகர் வட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • உயிர்ச்சுனை (2019, தியாகு நூலகம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)

விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு

  • தமிழ் சிறுகதை பெருவெளி (2018, தியாகு நூலகம், கட்டுரைத் தொகுப்பு)

விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத் விருது (மேற்கு வங்கம்)(2012)
  • நுண்வெளி கிரகணங்கள் நாவலுக்காக குமுதம் ஏர் இந்தியா விருது (1995).
  • கூந்தப்பனை நாவலுக்கு கு. அழகிரிசாமி நினைவு விருது பெற்றார்.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு கேரளா பண்பாட்டுக் கழக விருது கிடைத்தது.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அரசு விருது (2006 – 2007).
  • ப. சிதம்பரம் உருவாக்கிய எழுத்து அமைப்பின் சார்பாக 2017 ஆண்டின் சிறந்த நாவலாக வலசை நாவல் விருது பெற்றது.
  • தன்னறம் இலக்கிய விருது (2022)

மேற்கோள்கள்

  1. http://www.masusila.com/2011/12/blog-post_23.html
  2. இர்ஷாத் முஹம்மது , தொகுப்பாசிரியர் (12 மே 2019). கவிதையைக் கண்டடைந்த பயிலரங்கு. தமிழ் முரசு நாளிதழ். https://www.tamilmurasu.com.sg/visai-workshop/story20190512-28349.html. 
  3. http://ushaadeepan.blogspot.ae/2012/01/blog-post.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சு._வேணுகோபால்&oldid=4216" இருந்து மீள்விக்கப்பட்டது