சு. அழகேசன்
முனைவர் சு. அழகேசன் (பிறப்பு: மார்ச்சு 20 1955) இந்தியா தமிழ்நாடு, பழவூரில் பிறந்து தற்போது மட்டக்கடை தூத்துக்குடி பார்த்தசாரதி தெருவில் வசித்துவரும் இவர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவரும், தொல்காப்பியர் மன்றத்தின் செயலாளரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவரும், உலகத் திருக்குறள் பேரவையின் புரவலருமாவார்.
எழுதிய நூல்கள்
- இலக்கணப் பாதையில்
- இலக்கணச்சுவை
- இலக்கணத் தேடல்கள்
- இலக்கணப் பார்வைகளும் பதிவுகளும்
உட்பட 15 நூல்களை எழுதியுள்ளார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- நல்லாசிரியர் விருது
- ஜாம்பவான் விருது
- இலக்கணச் செம்மல் விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011