சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென் (Sushmita Sen; இந்தி: सुष्मिता सेन, பிறப்பு 19 நவம்பர் 1975) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். 18 வயதில் பெமினா மிஸ் இந்தியா, 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்சு போன்ற அழகுப் போன்ற போட்டிகளில் வென்றார்.[4]

சுஷ்மிதா சென்
Sushmita Sen at the launch of Titan’s new Art Deco Collection (cropped).jpg
2023 இல் சென்
பிறப்பு19 நவம்பர் 1975 (1975-11-19) (அகவை 48)[1][2]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[3]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994 – தற்போதும்
பட்டம்பெமினா மிஸ் இந்தியா 1994
மிஸ் யுனிவர்சு 1994
பிள்ளைகள்2

ஆரம்ப கால வாழ்க்கை

சென் 19 நவம்பர் 1975 அன்று ஐதராபாத்தில் வங்காள வைத்தியா குடும்பத்தில் பிறந்தார், இவரது தந்தை சுபீர் சென் இந்திய விமானப்படை முன்னாள் வானூர்திச் சீறகத் தலைவர். இவரது தாய் சுப்ரா சென் நகை வடிவமைப்பாளர், துபாயை தளமாகக் கொண்ட கடையின் உரிமையாளர்.[5][6] இவருக்கு ராசீவ் சென் என்ற இளைய சகோதரர் இருக்கிறார், ராசீவ் தொலைக்காட்சி நடிகை சாரு அசோபாவை மணந்தார்.[7] சென் புது தில்லியில் உள்ள விமானப்படை பொன்விழா பயிலகத்திலும்[8] சிக்கந்தராபாத்திலுள்ள தூய அன்னா உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார், மேற்கொண்டு உயர் கல்வியைத் தொடரவில்லை.[9][10]

அலங்கார அணிவகுப்பு

1994 இல், 18 வயதில் சென் நுழைந்து பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். மிஸ் யுனிவர்சு 1994 போட்டியில் போட்டியிடும் உரிமையை பெற்று,[11][12] மிஸ் யுனிவர்சு போட்டியில், மிஸ் கொலம்பியா கரோலினா கோம்ஸ் மற்றும் மிஸ் வெனிசுவேலா மினோர்கா மெர்காடோ ஆகியோருக்குப் பிறகு, முதற்கட்டப் போட்டியில் சென் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அடுத்த சுற்றுகளில் சென் இரண்டாவது, ஐந்தாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தார், இறுதியாக மிஸ் யுனிவர்சு 1994 பட்டத்தையும் அதன் கிரீடத்தையும் வென்றார்.[13][14]

மிஸ் யுனிவர்சு இந்திய பிரதிநிதி அழகியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை டைம்சு குழுமம் கைவிட்ட பிறகு, ஐ அம் சீ – மிஸ் யுனிவர்சு இந்தியா என்ற திட்டத்தை சென் தொடங்கினார், அது மூன்றாண்டுகளுக்கு (2010-2012) இயங்கியது. இதை தொடர்ந்து பெமினா இந்தியாவுக்கு பொறுப்பேற்றார்.[15][16]

மிஸ் யுனிவர்சு நடுவர் 2016

சனவரி 2016 இல், மிஸ் யுனிவர்சு 2016 நடுவர்களில் ஒருவராக சென் பிலிப்பீன்சு நாட்டிலுள்ள மணிலா பெருநகரத்தில் மால் ஆப் ஆசியா அரங்கில் தோன்றினார்.[17] சிந்தியா பெய்லி, மிக்கி போர்டுமேன், பிரான்சின் லாப்ராக், லீலா லோப்சு, தயனாரா டோரசு ஆகியோருடன் நடுவராக இணைந்தனர்.[18]

நடிப்பு வாழ்க்கை

அறிமுகம் மற்றும் திருப்புமுனை (1996–2000)

மிஸ் யுனிவர்சை வென்ற பிறகு, சென் இந்தித் திரையுலகில் நுழைந்தார். இவரது முதல் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான தஸ்தக் என்ற திரில்லர் திரைப்படம், இதில் சரத் கபூர் நடித்தார்.[19]

இவர் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் என்ற தமிழ் அதிரடித் திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்தார்.[20] இது வெளியான சமயத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது.[21] 1998 ஆம் ஆண்டில், ஜோர் என்ற இந்தித் திரைப்படத்தில் சன்னி தியோலுக்கு ஜோடியாக நிருபராக நடித்தார் இது திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையகத்தில் தோல்வியை தழுவியது.[22]

1999 இல், டேவிட் தவான் இயக்கிய பிவி நம்பர்.1 என்ற இந்தி நகைச்சுவைத் திரைப்படத்தில் சல்மான் கான், கரிஷ்மா கபூருடன் இணைந்து ரூபாலி வாலியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றார். இது விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது, 1999 இன் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவானது.[23] , "சென் வித்தியாசமான பாத்திரத்தில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சித்துள்ளார், ஆனால் அவரது பாத்திரமே நினைவில் கொள்ளத்தக்கதாக இல்லை." என்று ரெடிப்.காம் சையத்து பிர்தௌசு அஷ்ரப் குறிப்பிட்டார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[24] அதே ஆண்டு, சிர்ப் தும் என்ற காதல் திரைப்படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான இரண்டாவது பரிந்துரையைப் பெற்றார். "படத்தின் நட்சத்திரம்" என்றார் ரெடிப்.காம் சர்மிளா தாலிகுலம்.[25] அந்த வருடத்தின் இறுதிப் படம் ஹிந்துசுதான் கி கசம் இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார், இப்படம் சராசரி வசூலை பெற்றது.[26]

2000 இல், ஆகாசு என்ற இந்தி அதிரடி திரில்லர் திரைப்படத்தில் சுனில் செட்டிக்கு ஜோடியாக காவல் அதிகாரியாக நடித்தார்.[27]

தொழில் முன்னேற்றம் (2001–2005)

படிமம்:Cast of Filhaal.jpg
2001 ஆம் ஆண்டு வெளியான ஃபில்ஹால் திரைப்படத்தின் இசை வெளியீட்டில் நடிகர்கள் (இடது பக்கத்திலிருந்து இரண்டாவது இடத்தில் சென்)

2001 ஆம் ஆண்டில், முதன்முதலில் கோவிந்தாவுக்கு ஜோடியாக கியோ கியி... மெயின் ஜுத் நஹின் போல்டா என்ற திரைப்படத்தில் நடித்தார்.[28] அந்த ஆண்டின் இரண்டாவது திரைப்படமான பஸ் இத்னா சா குவாப் ஹை திரைப்படத்தில் நடித்தார்.[29]

சென் 2002 இல் இவர் நடித்த பாத்திரங்களுக்காக பாராட்டைப் பெற்றார். ஆன்கென் என்ற 2002 ஆண்டின் முதல் திரைப்படத்தில் அர்ஜுன் ராம்பால், அக்‌சய் குமார் ஆகியோருக்கு ஜோடியாக இவர் ஒரு ஆசிரியை பாத்திரத்தில் நடித்தார், விமர்சன ரீதியாக நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, 2002 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.[30][31] அடுத்ததாக தும்கோ நா பூல் பாயேங்கே என்ற அதிரடி திரில்லர் திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்.[32] அந்த ஆண்டின் இறுதித் திரைப்படமான ஃபில்ஹால்... என்ற காதல் திரைப்படத்தில் பதிலித்தாய் பாத்திரத்தில் நடித்தார். "சுஷ்மிதா சென்னின் சிறப்பான நடிப்பு (இன்றைய தேதி வரை) மிகவும் கவர்ந்தது." ஐடில்பிரைன் இராதிகா இராஜாமணி என்றார்.[33]

2003 ஆம் ஆண்டு இவர் சமய்: வென் டைம் ஸ்டிரைக்சு என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தார், அத்திரைப்படத்தில் ஒரு விதவைக் காவலராக நடித்தார் [34] பாலிவுட் அங்காமா தரண் ஆதர்ஷ், "சுஷ்மிதா சென், சவாலான பாத்திரத்தில் நடித்தார், தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்கிறார்" என்று குறிப்பிட்டார்.[35]

இவர் நடித்த மூன்று படங்கள் 2004 இல் வெளியானது. முதலில் அவர் முதலில் வாஸ்து சாஸ்திரா என்ற திரைப்படத்தில் ஜே. டி சக்ரவர்த்திக்கு ஜோடியாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்தார்.[சான்று தேவை] இரண்டாவது மேயின் ஹூன் நா என்ற திரைப்படமானது இவரது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமாகும், இதில் சாருக்கானுக்கு ஜோடியாக வேதியியல் ஆசிரியர் பாத்திரத்தில் நடித்தார். இப்படம் மொத்தம் 330,000,000 வசூலித்தது, அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகும்.[36][37] மூன்றாவது திரைப்படம், பைசா வசூல் என்ற திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவுடன் இணைந்து நடித்தார்.[38]

சென் தனது 2005 ஆம் ஆண்டின் இரண்டு படங்களின் மூலம் வெற்றியைப் பெற்றார். மைனே பியார் கியூன் கியா? என்ற திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடித்தார். இது அந்த ஆண்டின் ஐந்தாவது அதிக வசூல் திரைப்படமாக உருவெடுத்தது.[39] ரெட்டிஃப்.காம் சுகன்யா வர்மா, "சென் நைனா பாத்திரத்தில் கவர்ச்சியாக தெரிகிறார், அறிவாக பேசுகிறார், சிறப்பாக செயல்படுகிறார். அவரது புத்திசாலித்தனம், சுற்றுப்புறத்தின் அபத்தத்தில் தலையிடாது. அது உறுதியளிக்கிறது." [40] அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் மெயின் ஐசா ஹி ஹூன் என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்தார்.[41]

தொழில் ஏற்ற இறக்கங்கள் (2006–2011)

சென் 2006 இல் இரண்டு வெளியீடுகளைக் கொண்டிருந்தது. முதல் வெளியீடு, பெயர் சந்தியா தொழில் தாசி என்ற திரைப்படத்தில் அனுஜ் சாவ்னிக்கு ஜோடியாக ஒரு குழந்தையுடன் விபச்சாரியாக நடித்தார். ரெட்டிஃப்.காம் பிரியங்கா ஜெயின், "சுஷ்மிதா மனதைக் கவரும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இது அவரது படம். இந்த படத்தைப் பார்ப்பதற்கு அவர் மட்டுமே காரணம்" என்றார்.[42] பின்னர் ஜிந்தகி ராக்சு என்ற இசைத் திரைப்படத்தில் சைனி அஹுஜாவுக்கு ஜோடியாக நடித்தார்.[43]

2007 இல், பிரசாந்த் ராஜ் சச்தேவ் ஜோடியாக ராம் கோபால் வர்மா கி ஆக் என்ற அதிரடி நாடகத் திரைப்படத்தில் விதவையாக நடித்தார்.[44] இது இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் மிக மோசமான படமாக கருதப்படுகிறது.[45] 2009 இல், கர்மா அவுர் ஹோலி என்ற நாடகத் திரைப்படத்தில் ரந்தீப் ஹூடாவுடன் நடித்தார், இதில் சென் முதன்முதலில் விமர்சன தோல்வி பெற்றார்.[46] பின்னர் கோவிந்தாவுக்கு ஜோடியாக டூ நாட் டிசுடர்ப் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார்.[47]

2010 இல் இரண்டு வெளியீடுகளைக் கொண்டிருந்தது. அவர் முதலில் சாருக்கான், பர்தீன் கானுக்கு ஜோடியாக துல்ஹா மில் கயா என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் சிறப்பு வடிவழகியாகத் தோன்றினார். இத்திரைப்படம் அந்த ஆண்டில் சுமாரான வெற்றியைப் பெற்றது.[48] பின்னர் அதே ஆண்டு நோ பிராப்ளம் என்ற அதிரடி-நகைச்சுவை திரைப்படத்தில் தோன்றினார்.[49][50]

(2015–தற்போது)

சென்னுக்கு ஐந்து ஆண்டுகளாக எந்த வெளியீடும் இல்லை. 2015 இல், இவர் நிர்பாக் என்ற வங்காள நாடகத் திரைப்படத்தில் அஞ்சன் தத்துக்கு மீண்டும் ஜோடியாக நடித்தார்.[51] இதுவே சென்னின் வாழ்க்கையில், வங்காள மொழியில் நடிக்கும் முதல் படம்.[52]

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஆர்யா என்ற இணையத் தொடரில் சென் அறிமுகமானார். இதில் சந்திரச்சூர் சிங்குக்கு ஜோடியாக மாபியா இராணியாக நடித்தார்.[53][54] 2022 இல் தொடரின் இரண்டாவது பாகத்தில் சென் தனது பாத்திரத்தை மீண்டும் செய்தார் [55][56]

தனிப்பட்ட வாழ்க்கை

சென் இரண்டு வளர்ப்பு மகள்களின் தாய். 24 வயதில் அவர் தனது முதல் மகள் ரெனி சென்னை 2000 ஆம் ஆண்டில் தத்தெடுத்தார், அவரது இரண்டாவது மகள் அலிசா 2010 இல் குடும்பத்தில் சேர்ந்தார்.[57]

உடல்நிலை

சென் 2014 ஆம் ஆண்டில் அடிசன் நோய் கண்டறியப்பட்டு, நோயை நிர்வகிக்க அவருக்கு வாழ்நாள் முழுவதும் சுடீராய்டு மருந்துகள் தேவைப்படும் என்று கூறப்பட்டது.[58][59] 2019 இல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, செனுக்கு சுடீராய்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.[60]

தொடர்புகள்

2004 முதல் 2006 வரை நடிகர் ரன்தீப் ஹூடாவுடன் சென் உறவில் இருந்தார் [61][62] சென் 2018 முதல் 2021 வரை வடிவழகர் ரோகமன் சாலுடன் களவளாவல் செய்தார் [63][64] சூலை 2022 இல், தொழிலதிபரும் துடுப்பாட்ட நிர்வாகியுமான லலித் மோடியுடன் களவளாவல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது வகை திரைப்படம் விளைவு மேற்.
2000 பிலிம்பேர் விருதுகள் சிறந்த துணை நடிகை பீவி நம்பர். 1 Won [65]
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் சிறந்த துணை நடிகை Won [66]
திரை விருதுகள் சிறந்த துணை நடிகை Won [67]
ஜீ திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் - பெண் Won [68]
பிலிம்பேர் விருதுகள் சிறந்த துணை நடிகை சிர்ப் தும் Nominated [65]
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [66]
பீப்பிள்சு சாய்சு விருதுகள் இந்தியா சிறந்த துணை நடிகை Won [69]
திரை விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [67]
ஜீ திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் - பெண் Nominated [68]
2001 பீப்பிள்சு சாய்சு விருதுகள் இந்தியா சிறந்த துணை நடிகை பாஸ் இத்னா சா குவாப் ஹை Nominated [69]
2003 பாலிவுட் திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை ஃபில்ஹால்... Nominated [70]
பிலிம்பேர் விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [71]
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [72]
சான்சுய் வியூவர்சு சாய்சு திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [73]
திரை விருதுகள் சிறந்த துணை நடிகை Nominated [74]
ஜீ திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் - பெண் Won [75]
2004 திரை விருதுகள் சிறந்த நடிகை சமய்: வென் டைம் ஸ்ட்ரைக்சு Nominated [76]
2005 ஸ்டார்டசுட் விருதுகள் ஆண்டின் சிறந்த நட்சத்திரம் – பெண் மெயின் ஹூன் நா Nominated [77]
ஜீ திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் - பெண் Nominated [78]
2013 அன்னை தெரசா விருதுகள் சமூக நீதி இல்லை Won [79]
2016 இந்திய தலைமைத்துவ மாநாடு தசாப்தத்தின் அழகி மற்றும் நடிகை இல்லை Won [80]
2018 ஐ ஆம் வுமன் விருதுகள் பொருள் பெண் விருது இல்லை Won [81]
2020 பிலிம்பேர் ஓடிடி விருதுகள் நாடகத் தொடரில் சிறந்த நடிகர் - பெண் ஆர்யா Won [82]
2021 இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் சிறந்த நடிகை - ஓடிடி Nominated [83]
சேம்பியன்சு ஆப் சேஞ்ச் விருது சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்கான தேசிய விருது இல்லை Won [84]
2022 பிலிம்பேர் ஓடிடி விருதுகள் நாடகத் தொடரில் சிறந்த நடிகர் - பெண் ஆர்யா 2 Nominated [85]
இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் சிறந்த நடிகை - ஓடிடி Nominated [86]

மேற்கோள்கள்

  1. "Bollywood beauty Sushmita Sen turns 40". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/photos/entertainment-gallery/bollywood-beauty-sushmita-sen-turns-39/. 
  2. "Sushmita Sen turns a year older: Lesser known facts". India Today. 19 November 2015 இம் மூலத்தில் இருந்து 8 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170908125115/http://indiatoday.intoday.in/education/story/sushmita-sen-turns-a-year-older/1/526622.html. 
  3. "News : Sushmita Sen now wants a biological child". The Hindu. Indo-Asian News Service (Chennai, India). 21 May 2010 இம் மூலத்தில் இருந்து 23 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723165300/http://www.thehindu.com/news/article434968.ece. 
  4. "Fans wish Zeenat, Sushmita on birthday". 23 November 2011 இம் மூலத்தில் இருந்து 23 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723211917/http://www.sify.com/news/fans-wish-zeenat-sushmita-on-birthday-news-entertainment-llxx6cfabei.html. 
  5. "Sharmila Tagore to Sushmita Sen, Bollywood divas born in Hyderabad". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/sharmila-tagore-to-sushmita-sen-these-8-bollywood-divas-were-born-in-hyderabad/photostory/81495750.cms?picid=81495780. பார்த்த நாள்: 14 March 2021. 
  6. "সুস্মিতা সেন" (in en-US). 14 June 2020. https://www.deshdarpon.com/2020/06/14/127439. 
  7. "Unseen Pictures From Sushmita Sen's Brother Rajeev And Charu Asopa's Wedding". 22 June 2019 இம் மூலத்தில் இருந்து 24 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190624162855/https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/unseen-pictures-from-sushmita-sens-brother-rajeev-and-charu-asopas-wedding/photostory/69898683.cms. 
  8. "Sushmita Sen turns a year older: Lesser known facts" (in en). 19 November 2015 இம் மூலத்தில் இருந்து 30 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330141211/https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/sushmita-sen-turns-a-year-older-273480-2015-11-19. 
  9. Ganesh S Lakshman (12 February 2006). "MCH bulldozers may force St. Ann's to relocate". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029205210/http://articles.timesofindia.indiatimes.com/2006-02-12/hyderabad/27814807_1_mch-hyderabad-public-school-compound-wall. 
  10. Sharma, Garima (6 March 2010). "No college degree for Sushmita Sen". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN இம் மூலத்தில் இருந்து 17 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817111446/http://articles.timesofindia.indiatimes.com/2010-03-06/news-interviews/28145558_1_sushmita-sen-renee-and-alisah-maitreyi-college. 
  11. "The Hindu Business Line : Coke-Sushmita Sen deal cancelled". Business Line. 16 July 2003. http://www.thehindubusinessline.in/2003/07/16/stories/2003071601940900.htm. 
  12. "1994". Pageontopolis இம் மூலத்தில் இருந்து 3 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110903002531/http://www.pageantopolis.com/international/world_1994.htm. 
  13. "Miss Universe 1994" இம் மூலத்தில் இருந்து 7 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120207055111/http://www.pageantopolis.com/international/Universe_1994.htm. 
  14. Varma, Nikhil (14 May 2011). "Beauties and the B". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110084835/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011051453880300.htm&date=2011%2F05%2F14%2F&prd=mp&. 
  15. "I'm a born entrepreneur: Sushmita Sen". Hindustan Times. 13 July 2011 இம் மூலத்தில் இருந்து 18 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111118093810/http://www.hindustantimes.com/News-Feed/celebwatch/I-m-a-born-entrepreneur-Sushmita-Sen/Article1-719756.aspx. 
  16. "INTERNATIONAL PAGEANT WINNERS". The Times of India இம் மூலத்தில் இருந்து 9 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120409194441/http://feminamissindia.indiatimes.com/Archives/International-Winners/articleshow/msid-5931192,curpg-3.cms. 
  17. "23 years after Sushmita Sen won, she was back at Miss Universe pageant. See pics". 31 January 2017. http://indianexpress.com/photos/entertainment-gallery/23-years-after-sushmita-sen-won-she-was-back-at-miss-universe-pageant-see-pics-4500091/4/. 
  18. "Sen as a judge of 65th Miss Universe". Heavy. 29 January 2017. http://heavy.com/entertainment/2017/01/miss-universe-2016-2017-judges-who-are-the-judging-scores-pageant-competition/. 
  19. "Dastak - Cast and Crew (1996)" இம் மூலத்தில் இருந்து 17 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111117164303/http://www.bollywoodhungama.com/movies/cast/6132/index.html. 
  20. Shobha Warrier (2 August 1997). "Litmus test" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304063652/http://www.rediff.com/movies/aug/02sush.htm. 
  21. "Location Diaries: Candid shots and close shaves". 7 March 2018 இம் மூலத்தில் இருந்து 30 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220430080603/https://www.cinemaexpress.com/stories/columns/2018/mar/07/location-diaries-taking-candid-shots-of-amitabh-bachchan-4903.html. 
  22. "Zor Movie 1998". Box Office India இம் மூலத்தில் இருந்து 17 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017072524/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=204&catName=MTk5OA==. 
  23. "Box Office India 1998". Box Office India இம் மூலத்தில் இருந்து 8 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708090437/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=205. 
  24. Syed Firdaus Ashraf. "Rediff on the NeT, Movies: Biwi No 1 Movie Review". https://m.rediff.com/movies/1999/may/29biw.htm. 
  25. Sharmila Taliculam. "Rediff on the NeT, Movies: Sirf Tum Movie Review". https://www.rediff.com/entertai/1999/jun/11sirf.htm. 
  26. "Box Office India - Hindustan Ki Kasam (1999)" இம் மூலத்தில் இருந்து 18 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150318000034/http://boxofficeindia.com/Movies/movie_detail/hindustan_ki_kasam. 
  27. "Aaghaaz (2000) - Movie Review by Anjali Abrol". https://planetbollywood.com/displayReview.php?id=032706025142. 
  28. Pankaj Kapoor. "Liar, Liar? Govinda Jhoot Nahin Bolta!". The Times of India. http://timesofindia.indiatimes.com/calcutta-times/Liar-Liar-Govinda-Jhoot-Nahin-Bolta/articleshow/2081298422.cms. பார்த்த நாள்: 28 August 2011. 
  29. "Bas Itna Sa Khwaab Hai's nightmare!". http://www.rediff.com/movies/2001/apr/16bas.htm. 
  30. "Vipul Shah on 15 years of Aankhen: Bollywood had its bets the film wouldn't work". 5 April 2017. https://www.hindustantimes.com/bollywood/vipul-shah-on-15-years-of-aankhen-bollywood-had-its-bets-the-film-wouldn-t-work/story-xzJIicvAyw2NfgVPNTJhcL.html. 
  31. "From All the Best To Aankhen!". 23 August 2001 இம் மூலத்தில் இருந்து 2 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202093055/http://articles.timesofindia.indiatimes.com/2001-08-23/news-interviews/27245322_1_arjun-film-amitabh-and-akshay-kumar. 
  32. "Tumko Na Bhool Paayenge". Box Office India இம் மூலத்தில் இருந்து 10 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010041921/http://boxofficeindia.com/showProd.php?itemCat=208&catName=MjAwMg==. 
  33. "Bollywood Best - Hindi cinema movie review - Filhaal - Meghana Gulzar". http://www.idlebrain.com/mumbai/reviews/mr-filhaal.html. 
  34. N, Anjum (10 October 2003). "Sushmita's time out!" இம் மூலத்தில் இருந்து 10 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160410004714/http://www.rediff.com/movies/2003/oct/10samay.htm. 
  35. Taran Adarsh (10 October 2003). "Samay – When Time Strikes Movie Review". https://www.bollywoodhungama.com/amp/movie/samay-when-time-strikes/critic-review/samay-when-time-strikes-movie-review/. 
  36. "Main Hoon Na (2004)". Box Office India இம் மூலத்தில் இருந்து 14 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014132208/http://boxofficeindia.com/showProd.php?itemCat=210&catName=MjAwNA%3D%3D. 
  37. "Awards for MHN 2004" இம் மூலத்தில் இருந்து 21 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110921022012/http://www.bollywoodhungama.com/movies/awards/7134/index.html. 
  38. Kulkarni, Ronjita (9 January 2004). "Manisha, Sushmita are paisa vasool!" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304133301/http://www.rediff.com/movies/2004/jan/09paisa.htm. 
  39. "Maine Pyaar Kyun Kiya?" இம் மூலத்தில் இருந்து 29 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120229131030/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=211. 
  40. Sukanya Verma. "Movie Review - David Dhawan does it again with Maine Pyaar Kyun Kiya". https://www.rediff.com/movies/2005/jul/15mpkk.htm. 
  41. Pandohar, Jaspret (1 May 2005). "Main Aisa Hi Hoon (I Am Like This) (2005)". BBC. https://www.bbc.co.uk/films/2005/05/06/main_aisa_hi_hoon_2005_review.shtml. 
  42. Priyanka Jain. "Chingari Movie Review - Mindblowing Sush, boring Chingaari". https://www.rediff.com/movies/2006/feb/17chingaari.htm. 
  43. "Check out Sushmita Sen - The rock star". 19 September 2006. https://www.news18.com/news/india/check-out-sushmita-the-rock-star-247000.html. 
  44. "Ram Gopal Varma Ki Aag (2007) - Indian Express". http://archive.indianexpress.com/news/ram-gopal-varma-ki-aag/213997/0. 
  45. "A Decade of decadence". 20 October 2013 இம் மூலத்தில் இருந்து 20 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020040304/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-31/news-interviews/28236351_1_rakhi-sawant-salman-khan-vivek-oberoi. 
  46. Rajeev Masand.
  47. Malani. "Do Knot Disturb: Movie Review". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/do-knot-disturb-movie-review/articleshow/5080223.cms?from=mdr. பார்த்த நாள்: 12 February 2013. 
  48. Geety Sahgal (18 December 2008). "Cross-checking Love" இம் மூலத்தில் இருந்து 12 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100112131934/http://www.screenindia.com/news/Cross-checking-Love/555327. 
  49. Taran Adarsh (2009). "Anil Kapoor finalises the principal cast of 'No Problem'". https://www.bollywoodhungama.com/award/filmfare-award/2009-2/. 
  50. "Movie Review: No Problem" இம் மூலத்தில் இருந்து 17 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120917005510/http://movies.ndtv.com/movie_review.aspx?lang=hindi&id=576&moviename=Movie+Reivew:+No+Problem. 
  51. "Sushmita Sen's Bengali Film Nirbaak 'Big Moment' For Her Father – NDTV Movies". 30 April 2015. http://movies.ndtv.com/regional/sushmita-sens-bengali-film-nirbaak-big-moment-for-her-father-759422. 
  52. "The Susmita Sen connection". 13 August 2014 இம் மூலத்தில் இருந்து 9 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141109215548/http://www.telegraphindia.com/1140813/jsp/t2/story_18714416.jsp#.VCOf9348KrU. 
  53. "Sushmita Sen announces return to films: 'My fans have waited 10 long years'". 9 December 2019. https://www.hindustantimes.com/bollywood/sushmita-sen-announces-return-to-films-my-fans-have-waited-10-long-years/story-nbV1DDdJWMAcnptQAlZRBI.html. 
  54. Jhunjhunwala, Udita (9 June 2020). "Ram Madhvani on how the movie 'Aarya' became a web series – and why Sushmita Sen is in it". https://scroll.in/reel/964165/ram-madhvani-on-how-the-movie-aarya-became-a-web-series-and-why-sushmita-sen-is-in-it. 
  55. Kanyal, Jyoti (5 July 2020). "Aarya: Sushmita Sen and Ram Madhvani announce season 2 of actress's debut web series" (in en). https://www.indiatoday.in/binge-watch/story/aarya-sushmita-sen-and-ram-madhvani-announce-season-2-of-actress-s-debut-web-series-1697204-2020-07-05. 
  56. Arushi Jain (5 July 2020). "Sushmita Sen, Ram Madhvani announce second season of Aarya" (in en). https://indianexpress.com/article/entertainment/web-series/sushmita-sen-ram-madhvani-announce-second-season-of-aarya-6490917/. 
  57. "Sush consoles Renee". Deccan Chronicle. 5 February 2011 இம் மூலத்தில் இருந்து 25 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120125062105/http://www.deccanchronicle.com/channels/showbiz/bollywood/sush-consoles-renee-953. 
  58. "Miss Universe and actress Sushmita Sen reveals her battle with Addison's disease; here is what it means". The Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/sushmita-sen-reveals-her-battle-with-addisons-disease-here-is-what-it-means/articleshow/75824194.cms. பார்த்த நாள்: 19 June 2020. 
  59. "Money Heist's Lisbon sings Salman Khan's Chunari Chunari, impressed Sushmita Sen says 'yeh baat!'. Watch" (in en). 17 November 2020. https://www.hindustantimes.com/bollywood/money-heist-s-lisbon-sings-salman-khan-s-chunari-chunari-impressed-sushmita-sen-says-yeh-baat-watch/story-jHf7RQBZR0crrBzbVk34JJ.html. 
  60. "Sushmita Sen's battle with Addison's disease and the workout that helped her emerge stronger". The Times of India. 30 November 2021. https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/sushmita-sens-battle-with-addisons-disease-and-the-workout-that-helped-her-emerge-stronger/photostory/87988141.cms. பார்த்த நாள்: 16 March 2024. 
  61. Uddin, Zakia (18 January 2013). "Randeep Hooda: 'Break-up with Sushmita Sen changed my life'" இம் மூலத்தில் இருந்து 25 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130225091620/http://www.digitalspy.co.uk/bollywood/news/a452018/randeep-hooda-break-up-with-sushmita-sen-changed-my-life.html. 
  62. Bollywood Hungama (30 March 2005). "The new man in Sushmita's life" இம் மூலத்தில் இருந்து 3 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131003204541/http://www.sify.com/movies/the-new-man-in-sushmita-s-life-news-bollywood-kkfv67egbgd.html. 
  63. Kajal Nathur. "Sushmita Sen confirms dating Rohman Shawl, says she's Rohman'cing life". Filmfare. https://m.filmfare.com/news/bollywood/sushmita-sen-confirms-dating-rohman-shawl-says-shes-rohmancing-life-31143.amp. 
  64. "After split with Rohman Shawl, Sushmita Sen hints at what went wrong in relationship". DNA India. https://www.dnaindia.com/bollywood/report-after-split-with-rohman-shawl-sushmita-sen-hints-at-what-went-wrong-in-relationship-2927339/amp. 
  65. 65.0 65.1 "The 45th Filmfare Awards 2000 Winners List". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 May 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070515210654/http://filmfareawards.indiatimes.com/articleshow/368698.cms. 
  66. 66.0 66.1 "The 1st IIFA Awards 2000 Winners". International Indian Film Academy இம் மூலத்தில் இருந்து 12 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051212144140/http://www.iifa.com/2000_winner.htm. 
  67. 67.0 67.1 "Screen Award Winners for the year 1999 are". Screen India இம் மூலத்தில் இருந்து 7 January 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040107073252/http://www.screenindia.com/screenawards/award99.html. 
  68. 68.0 68.1 "The 3rd Zee Cine Awards 2000 Viewers Choice Awards Nominees & Winners". Zee Cine Awards இம் மூலத்தில் இருந்து 17 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200517024855/https://www.zeecineawards.com/timeline/2000/winners/. 
  69. 69.0 69.1 "List of awards and nominations received by Sushmita Sen". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 May 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070515210654/https://m.timesofindia.com/topic/Sushmita-Sen/awards. 
  70. "Winners of Bollywood Movie Awards: 1999 – 2007". Bollywood Awards இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102124901/http://www.bollywoodawards.com/winba9.php. 
  71. "48th Filmfare Awards Winners - 'Devdas' bags 11, 'Saathiya' bags 4". The Hindu. 23 February 2003 இம் மூலத்தில் இருந்து 22 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210322065520/https://www.thehindu.com/todays-paper/tp-national/filmfare-awards-devdas-bags-11-saathiya-4/article27747348.ece. 
  72. "The 4th IIFA Awards 2003 Winners". International Indian Film Academy இம் மூலத்தில் இருந்து 12 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051212132503/http://www.iifa.com/2003_winner.htm. 
  73. "Sansui Viewer's Choice Movie Awards nominations" இம் மூலத்தில் இருந்து 13 April 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030413045821/http://www.sansuiviewerschoicemovieawards.com/nominations.htm. 
  74. "Devdas is a winner on night of starry dreams at Screen Awards". The Indian Express. 19 January 2003. https://indianexpress.com/article/news-archive/finally-devdas-is-a-winner-on-night-of-starry-dreams/. 
  75. "6th Zee Cine Awards Winners List – Year 2003" இம் மூலத்தில் இருந்து 24 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051224182337/http://www.zeecineawards.com/year2003.html. 
  76. "Sci-fi sweep at Star Screen Awards". The Indian Express (Mumbai, India). 19 January 2004 இம் மூலத்தில் இருந்து 19 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210519122515/https://indianexpress.com/article/news-archive/sci-fi-sweep-at-star-screen-awards/. 
  77. "Max Stardust awards nominations". Stardust இம் மூலத்தில் இருந்து 6 February 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050206001033/http://www.stardustindia.com/stardust_awards2005.htm. 
  78. "Zee Cine Awards Nominations 2004". Bollywood Hungama இம் மூலத்தில் இருந்து 15 March 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050315002806/http://www.indiafm.com/awards/zee/nominations04.shtml. 
  79. "Harmony Foundation to host Mother Teresa Awards on 9 November". Daily News and Analysis. http://www.dnaindia.com/mumbai/report-harmony-foundation-to-host-mother-teresa-awards-on-nov-9-2033089. பார்த்த நாள்: 8 November 2014. 
  80. "Inspiring Youth icon Sushmita Sen bags the prestigious "Eternal Beauty & Actress of the Decade" at India Leadership Conclave 2016". Indian Affairs. 20 July 2016. http://indianaffairs.tv/inspiring-youth-icon-sushmita-sen-bags-the-prestigious-eternal-beauty-actress-of-the-decade-at-india-leadership-conclave-2016/. 
  81. "Being born as woman is a huge award for Former Miss Universe Sushmita Sen". The Indian Express. 29 April 2018. https://www.newindianexpress.com/entertainment/hindi/2018/apr/29/being-born-as-woman-a-huge-award-for-former-miss-universe-sushmita-sen-1807970.html/. 
  82. "Winners list of the Flyx Filmfare OTT Awards 2020" (in en). https://www.filmfare.com/features/winners-of-the-flyx-filmfare-ott-awards-45407.html. 
  83. "Check Out The 21st Indian Television Academy Awards Winners List" (in en). https://www.theita2021.com/. 
  84. "Sushmita Sen, Hema Malini among others win Champions of Change Award 2021". https://in.makers.yahoo.com/sushmita-sen-hema-malini-win-champions-of-change-award-2021-102123858.html. பார்த்த நாள்: 29 December 2021. 
  85. "Nominations announced for Danube Properties Filmfare OTT Awards 2022" (in en). 21 December 2022. https://www.filmfare.com/features/nominations-for-the-danube-properties-filmfare-ott-awards-2022_-56102.html. 
  86. "ITA Awards 2022 complete winners list: Varun Dhawan, Nakuul Mehta, Pranali Rathod, The Kashmir Files win big". The Indian Express. 12 December 2022. https://indianexpress.com/article/entertainment/television/ita-awards-2022-complete-winners-list-varun-dhawan-nakuul-mehta-the-kashmir-files-win-big-8320262/lite/. 
"https://tamilar.wiki/index.php?title=சுஷ்மிதா_சென்&oldid=22841" இருந்து மீள்விக்கப்பட்டது