சுவீடிய மொழி

சுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், இசுக்கான்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோரிசு மொழியிலிருந்து உருவானது.

சுவீடிய மொழி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
9.2 மில்லியன்  (2017)
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sv
ISO 639-2swe
ISO 639-3swe
{{{mapalt}}}
ஸ்வீடிஷ் பேசும் மனிதன்
போட்காஸ்டில் ஸ்வீடிஷ் பேசுகிறார்

தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுவீடிய_மொழி&oldid=19936" இருந்து மீள்விக்கப்பட்டது