சுவிற்சர்லாந்து தமிழர்
சுவிற்சர்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பாலனவர்கள் ஈழப் பிரச்சினை காரணமாக சுவிற்சர்லாந்துக்கு புலம்புகுந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பெரும்பான்மையான சுவிற்சர்லாந்து தமிழர்கள் தமிழ்த் தேசிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். ஆறு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சுவிஸ் நாட்டில் ஏறத்தாள 45 000 தமிழர்கள் வசிக்கின்றார்கள் [1].
சுவிற்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற வெல்க தமிழ் எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் 10 000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள். பல பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த தமிழர்களும் இதில் அடங்குவர்.